ETV Bharat / state

ஜமாபந்தி நிறைவு விழாவில் விஏஓ-க்களை வெளுத்து வாங்கிய திமுக எம்.எல்.ஏ

author img

By

Published : May 26, 2022, 7:54 PM IST

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயத்தின் மூலம் 130 பயனாளிகளுக்கு ரூ.6,80,570 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் தேவராஜ் எம்.எல்.ஏ முன்னிலையில் வழங்கப்பட்டன.

ஜெயராஜ் எம்எல்ஏ
ஜெயராஜ் எம்எல்ஏ

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 18ஆம் தேதி முதல் தொடர்ந்து ஐந்து நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தி மற்றும் வருவாய் தீர்ப்பாயத்தின் 6ஆவது நாளான இன்று (மே 26) அந்நிகழ்வுகள் நிறைவு பெற்றன. அதன்படி, இந்த ஜமாபந்திக்குப் பிறகு திருப்பத்தூர், கொரட்டி, கந்திலி, ஜோலார்பேட்டை, புதூர் நாடு, ஆண்டியப்பனூர் ஆகிய 6 பகுதிகளைச் சேர்ந்த வருவாய்த்துறை வட்ட வழங்கல் பிரிவு சமூகப் பாதுகாப்புத்திட்டப் பிரிவுகளுக்குட்பட்ட 10 துறைகளின்கீழ் 601 மனுக்கள் பெறப்பட்டு 130 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. மேலும், இது தவிர 471 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.

இதனைத்தொடர்ந்து, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் 130 பயனாளிகளுக்கு ரூ.6,80,570 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், அந்த விழாவில் பேசிய ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், 'ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை; அதற்கு நாங்கள் மட்டும் சரியாக இருந்தால் போதாது. 100 விழுக்காடு அனைவரும் சரியாக இருக்க வேண்டும்.

குறிப்பாக விஏஓ-க்கள் மாத ஓய்வூதியம், விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு வருகின்ற பொதுமக்களை பல நாட்கள் அலைய விடுகிறார்கள். ஜமாபந்தி, மனுநீதி முகாம் போன்ற நாட்களில் மட்டும் கொடுத்து விடுகிறார்கள். அதற்கு வேறு காரணமும் இருக்கிறது. எனவே, எங்களோடு சேர்ந்து அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே ஆட்சியின் காட்சி மாறும்' என்று கூறினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள், இதர மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், பயனாளிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

மனு அளிக்கவரும் பொதுமக்களை அலைக்கழிக்கவேண்டாம் அறிவுறுத்திய எம்எல்ஏ

இதையும் படிங்க: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.