திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், உலகயே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் குறித்தும், அதனை பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சோமலாபுரம் கிராமம் வீதி வீதியாக ஊர்வலமாக சென்று பொதுமக்கள் அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த ஊர்வலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். ஊர் மக்களுக்கு கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக மாணவர்கள் நெகிழ்ந்து கூறினர்.