திருப்பத்தூர் மாவட்டத்தில் காங்கிரஸ் இளைஞர் அணி சார்பாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தியும் 74-ஆவது பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
அண்ணாமலை வணிகவளாகம் அருகே உள்ள ராஜிவ்காந்தி சிலைக்கு காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் பார்த்திபன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலையும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.