ETV Bharat / state

நின்ற லாரி மீது மோதிய மற்றொரு லாரி - 2 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Nov 6, 2020, 10:07 AM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மற்றொரு லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

2 பேர் உயிரிழப்பு
2 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று(நவ.6) சென்னையில் இருந்து தார் பைகளை ஏற்றிக்கொண்டு பெல்காம் (ஹார்பர்) பகுதியிற்கு சென்ற லாரி எதிர்பாராவிதமாக சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.

முன்னதாக, இன்று (நவ.6) அதிகாலை ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து பொள்ளாச்சி பகுதிக்கு மாடுகளை ஏற்றிச்சென்ற லாரி பழுதாகி சாலையில் நின்று கொண்டிருந்தது தெரியாமல் அந்த லாரியின் மீது மோதியுள்ளது.

நின்ற லாரி மீது மோதிய மற்றொரு லாரி

இந்த விபத்தில் தார் பைகளை ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநர் குண்டூர் கீழ்க்கையூர் பகுதியை சேர்ந்த பாலையா(45), மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்த லாரி உதவியாளர் கோபால் (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் லாரியில் படுகாயமடைந்த இருவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 3 ஆண்டு சிறை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.