ETV Bharat / state

முந்திச் செல்ல முயன்றதால் விபத்து- தலைகீழாக கவிழ்ந்த கார் - thiruppathur car accident

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரை முந்திச் செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார், மற்றொரு கார் மீது மோதியதில் 2 குழந்தைகள் உள்பட ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆம்பூர் அருகே காரை முந்திச் சென்ற மற்றொரு கார்.. எதிர்பாராத விபத்தில் ஏழு பேர் படுகாயம்

author img

By

Published : May 17, 2022, 7:50 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் ரபீக் என்பவர் தனது குழந்தைகள் இக்பா (1) அம்தான் (4) ஆகியோருடன் பேர்ணாம்பட் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, இவர்களுக்கு பின்னால் சாதிக் என்பவர் வாணியம்பாடியில் இருந்து வேலூர் நோக்கி மற்றொரு காரில் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில், முன்னே சென்ற ரபீக்கின் காரை சாதிக் முந்த முயன்றார். அப்போது சாதிக் காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், எதிர்பாராத விதமாக முன்னே சென்று கொண்டிருந்த ரபீக்கின் காரின் பக்கவாட்டில் மோதியது. இதில் இரண்டு கார்களும் எதிர்சாலையில் இருந்த தடுப்புகளைத் தாண்டிச் சென்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஆம்பூர் அருகே காரை முந்திச் சென்ற மற்றொரு கார்.. எதிர்பாராத விபத்தில் ஏழு பேர் படுகாயம்
ஆம்பூர் அருகே காரை முந்திச் சென்ற மற்றொரு கார்.. எதிர்பாராத விபத்தில் ஏழு பேர் படுகாயம்

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் ரபீக் மற்றும் அவரது குழந்தைகள் உள்பட 7 பேர் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், இவ்விபத்து குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அண்ணன் நினைவுநாளில் மிரட்டல் தொனியில் போஸ்டர் ஒட்டிய தம்பி உட்பட 4 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.