ETV Bharat / state

பிளாஸ்டிக் கழிவு கொடுப்பவர்களுக்கு “அண்ணாத்த” சிறப்பு காட்சி டிக்கெட் இலவசம் - annaatthe Special ticke

திருப்பத்தூர் அருகே ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் அண்ணாத்த திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்பட்டது.

plastic waste  one kilo of plastic waste  annathe Special ticket for one kilo of plastic waste  thirupattur news  thirupattur latest news  பிளாஸ்டிக் கழிவுகள்  பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அண்ணாத்த டிக்கெட்  அண்ணாத்த டிக்கெட்  அண்ணாத்த சிறப்பு காட்சி  அண்ணாத்த  annaatthe  annaatthe Special ticke  annaatthe movie
அண்ணாத்த
author img

By

Published : Nov 4, 2021, 11:43 AM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் ரஜினி ரசிகர்கள் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து கொடுக்கும் நபர்களுக்கு அண்ணாத்தே திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட உடன் உற்சாகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள் சிலர் மூட்டை மூட்டையாக பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து கொடுத்து சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர். மேலும் சுமார் 100 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை பெற்றுக்கொண்ட ரஜினி ரசிகர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்தவர்களுக்கு டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அண்ணாத்த டிக்கெட்

நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளுடன் திரைப்படம் வெளியாகும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் திரையரங்குகளில் வாழை மரங்கள், பேனர்கள், தோரணங்களை கட்டி பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜெய் பீம் படத்திற்கு தோழர் ராமகிருஷ்ணன் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.