ETV Bharat / state

விவசாய நிலத்தில் பழங்கால கற்கள் கண்டெடுப்பு! - Tirupattur news

திருப்பத்தூர்: இராமாபுரம் பகுதியில் விவசாய நிலத்தின் கிணற்றை தூர் வாரியபோது பழங்கால கற்கள் கண்டெடுக்கப்பட்டது.

பழங்கால கற்கள்
பழங்கால கற்கள்
author img

By

Published : May 5, 2020, 12:14 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், இராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் நேற்று தனது நிலத்தில் உள்ள பழமையான கிணற்றை தூர்வாருவதற்கான பணியை மேற்கொண்டார்.

அதற்காக கிணற்றின் அருகே புதர் மண்டியிருந்த மண் குவியலை டிராக்டர் மூலம் சமன் செய்தார். அப்போது டிராக்டரில் பெரிய பாறை ஒன்று, தட்டுப்பட்டும் சத்தம் கேட்டது. கீழே இறங்கி பார்த்தபோது பாறை இரண்டாக உடைந்திருந்தது. அந்தப் பாறையை நகர்த்தும்போது அதில் பழமையான உருவம் செதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

அதனைத் தொடர்ந்து நிலத்தின் உரிமையாளர், துறையினருக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த வருவாய் துறையினர், அந்த கற்களை மீட்டு, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து சில மாதங்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பழங்கால கற்கள் மற்றும் கல்வெட்டுகள் கிடைத்துவருகின்றன. இது குறித்து அரசு கூடுதல் கவனம் செலுத்தினால், மாவட்டத்திலுள்ள பல ஊர்களில் பழங்கால மன்னர்களின் வரலாற்றை அறியலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: சுண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதல் - பட்டாக்கத்தியுடன் வந்த நபர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.