திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்க்கொண்டார்.
இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது, உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் மாற்றத்தை நான் எதிர்பார்க்கிறேன். தமிழ்நாட்டில் அடுத்தது பாமக ஆட்சிக்கு வர வேண்டும், 54 ஆண்டுகள் இரண்டு கட்சிகள் ஆட்சி போதும், ஓர் மாற்றத்தை நாம் உருவாக்குவோம், எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்துவிட்டார்கள் தமிழ்நாட்டு மக்கள், ஓர் மாற்றம் வரவேண்டும்; அதற்கு தான் இந்த உள்ளாட்சி தேர்தல்.
திருப்பத்தூர் மாவட்டம் உருவாக பாமக தான் காரணம், எல்லோரும் கூறுகிறார்கள் வன்னியர்களுக்கு 10.05% திடீரென அளித்துவிட்டார்கள் என்று, 1980-இல் ஆரம்பித்த ஆயிரக்கணக்கான போராட்டம், 100க்கும் மேற்ப்பட்டோர் உயிர் தியாகம் என 41 ஆண்டுகால போரட்டம் காரணமாகதான் இந்த கிள்ளுக்கீரை 10.05%-த்தை கொடுத்துள்ளார்கள். இது போதாது.
எம்ஜிஆர், முதல் எடப்பாடி வரை எந்த ஒரு முதலமைச்சரும், இந்த ஒதுக்கீடு கொடுக்கவில்லை. அதற்கு பிறகு தான் லட்சக்கணக்கான மனுக்கள் கொடுத்து இதற்கான போராட்டம்; இது ஒன்றும் வன்னியர்களுக்கான அரசியல் பிரச்னை இல்லை, சமூக நீதி பிரச்னை, வளர்ச்சி பிரச்னை. இதற்கான போராட்டத்தில் முதற்கட்ட வெற்றியை பெற்றுள்ளோம் என்றார்.
இதையும் படிங்க: ’ நகைக்கடன் தள்ளுபடி திட்டம் ஏமாற்று வேலை’ - சிவி சண்முகம்