திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ். இவர் தனியார் தொழிற்சாலைகளுக்கு பஞ்சு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது பஞ்சு குடோன் ஆம்பூர் அடுத்த பாங்கிஷாப் பகுதியில் இருந்து வருகிறது. இந்த பஞ்சு குடோனில் இருந்து அதிக அளவில் கரும்புகை வெளிவந்ததையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்பூர் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையின் அரைமணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
மேலும் தீயில் எரிந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான காலணி பஞ்சுகள் சேதமடைந்ததாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இவ்விபத்து குறித்து உமராபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பலகோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.