திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கல்குவாரிப்பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்திற்குச் சென்ற காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரனையில், இறந்த பெண் ஆம்பூர் அடுத்த சின்னகொம்பேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த சுமதி எனத் தெரியவந்தது. இவர் காளிகாபுரம் எல்லுப்பாரை பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் சில ஆண்டுகளாகப் பழகி வந்துள்ளார்.
சுமதி சீனிவாசனிடம் திருமணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சீனிவாசன் சுமதியை சம்பவத்தன்று கல்குவாரிக்கு அழைத்துச்சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின் சுமதியை கழுத்தை நெரித்து அடித்து கொன்றுள்ளார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சீனிவாசனை ஆம்பூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆம்பூர் அருகே இளம்பெண் அடித்துக் கொலை - காவல் துறை விசாரணை