திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக ஸ்ரீதர் நிலத்தில் உள்ள 60 அடி கிணறு உள்வாங்கியது.
உடனடியாக இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், கிணற்றின் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளை வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.
கிணற்றின் அருகாமையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் கிணற்றில் மூழ்கும் நிலை உள்ளது. எனவே தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, கிணற்றை முழுவதுமாக மூட தீயணைப்பு துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலாற்றில் வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாலம்