திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த தும்பேரி பகுதியில் அதிமுகவினர் சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சின்னையா மற்றும் வீரமணி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இதில் பேசிய முன்னாள் அமைச்சர் சின்னையா, "பெண்களுக்கு கொடுக்க வேண்டிய ஆயிரம் ரூபாயை இன்னும் தரவில்லை. அவர் உங்களுக்கு 24 ஆயிரம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார். அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த போது 1500 ரூபாயை சேர்த்து 5000 ஆயிரம் ரூபயாக வழங்க வேண்டும் என கணக்கு தெரியாமல் அறிவுப்பூர்வமாக பேசியவர் தற்போது முதலமைச்சர். திமுகவினர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களிடம் உதைவாங்க உள்ளார்கள்.
தற்போது அறிவிக்கவுள்ள பட்ஜெட்டில் உறுபடியாக ஏதும் சொல்ல மாட்டார்கள் திமுகவினர். மேலும் சினிமாவை தவிர ஏதும் தெரியாது, உதயநிதி ஸ்டாலின் அரசாங்காத்தில் கொள்ளையடிப்பது பத்தாது என சினிமாவிலும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர். ஸ்டாலினாவது பரவாயில்லை மேயராக இருந்து வந்தவர். ஆனால் நான்கு நடிகையுடன் நடத்து விட்டு அமைச்சருக்கான மரியாதை இல்லாமல் பதவியில் கருப்பு பேண்ட் வெள்ளை சார்ட் போட்டு சுற்றுகிறார் அவருக்கு எந்த திறமையும் இல்லை, அவருக்கு அமைச்சர் பதவி.
பொங்கலுக்கு பல்லி விழுந்த புளியில் இருந்து உருகிய வெல்லம் வரை தந்தவர்கள். தேர்தலில் டாஸ்மாக் மூடப்படும் என சொன்னவர் கனிமொழி. அதில் தான் கொள்ளையடித்து ஈரோட்டில் வெற்றி பெற்று உள்ளனர். மேலும் திமுக குடும்பத்துடன் முடிந்த அளவு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது" என பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் வீரமணி, "கள்ளிப்பால் ஊற்றி குழந்தையை கொல்லும் நிலையை மாற்றி தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை அன்னை தெரசா பாராட்டினார். தேர்தலிலில் வாக்காளர்களை கவர்வதற்காக திமுக 520 வாக்குறுதிகளை கொடுத்து அதில் ஒன்றை கூட வெளிப்படைத் தன்மையுடன் நிறைவேற்றவில்லை. டாஸ்மாக்கை நம்பி ஆட்சி செய்பவர்கள் திமுகவினர். இதனால் தமிழ்நாட்டின் கடன் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
எப்பொழுதும் செங்கலுடன் சுற்றும் உதயநிதி அவர்களால் ஒரு மருத்துவக் கல்லாரியை கூட கட்ட முடியவில்லை. ஆனால் நாங்கள் ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து உள்ளோம். சந்தர்ப சூழ்நிலையால் ஆட்சிக்கு வந்தவர்கள் திமுகவினர். இனிமேல் மக்கள் ஏமாற வேண்டாம்" என பேசினார். மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவை விமர்சித்தால் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்றுவிடும் - புகழேந்தி