ETV Bharat / state

முட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து: முட்டைகளை சூறையாடி பொதுமக்கள்!

author img

By

Published : Aug 27, 2020, 7:41 PM IST

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே நாமக்கல்லில் இருந்து வேலூருக்கு முட்டை ஏற்றி வந்த லாரியானது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

முட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நாமக்கல்லில் இருந்து வேலூர் மார்க்கெட்டிற்கு, வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் 21 ஆயிரம் முட்டைகளை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், லாரியானது இன்று (ஆக்.27) அதிகாலை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது ஜானகிராமன் சற்று அசந்து தூங்கியதால் லாரியானது கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்தில் ஓட்டுநருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

விபத்துக்குள்ளான லாரி

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து லாரியை மீட்டு சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்தனர்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் லாரியில் இருந்த முட்டைகளை, சூறையாடினர்.

இதையும் படிங்க: காவலர் பூத் மீது டேங்கர் லாரி மோதியதில் சிசிடிவிக்கள் சேதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.