ETV Bharat / state

காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் தர்ணா!

திருப்பத்தூர் அருகே காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் ஒருவர் சாலையில் தர்ணா போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தர்ணா
தர்ணா
author img

By

Published : Feb 5, 2022, 1:51 PM IST

திருப்பத்தூர்: சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகள் ரத்திக்கா (26). இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் அருகே ஆத்தூரான்வட்டத்தில் வசிக்கும் தனபால் மகன் கோசல்ராம் (24). இவர் சென்னையில் கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.

காதலித்து ஏமாற்றியதாக புகார்

கோசல்ராம், ரத்திகா ஆகிய இருவரும் 2019ஆம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய கோசல்ராம், உல்லாசமாக இருந்ததாகவும் ரத்திகா கூறுகிறார்.

இதனால் உஷாரான ரத்திக்கா அவரை திருமணம் செய்யக் கோரி பலமுறை வற்புறுத்தி உள்ளார். இதனை கோசல்ராம் ரத்திகாவை கைவிட்டு, தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

தர்ணாவில் இறங்கிய இளம்பெண்

எனவே, சென்னையிலிருந்து ரத்திகா திருப்பத்தூரில் உள்ள ஆத்தூரான்வட்டத்தில் உள்ள கோசல்ராம் வீட்டிற்கு 13 நாள்களுக்கு முன்பு தேடி வந்துள்ளார். அவரையும் அவரின் பேச்சையும் அங்குள்ளவர்கள் ஏற்க மறுத்ததால் அவர்களுடைய வீட்டின் அருகிலேயே தர்ணாவில் அமர்ந்து இருந்ததாகத் தெரிகிறது.

இளம்பெண் தர்ணா

அதுமட்டுமின்றி அருகே உள்ள வீட்டில் உறங்கியும், உணவு அருந்தியும் 13 நாட்கள் கழித்து வந்ததாக ரத்திகா கூறுகிறார்.

செல்போன் பறிப்பு

இதையடுத்து, தலைமறைவான கோசல்ராம் இருக்கும் இடத்தை கூறாமல், அவரது குடும்பத்தாரை வைத்து ரத்திகாவை மிரட்டி வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், நேற்று (பிப். 4) மாலை ரத்திகாவை, கோசல்ராமின் குடும்பத்தார் அடித்து உதைத்து அவரிடமிருந்த செல்போனைப் பிடுங்கிச் சென்றதாகத் தெரிகிறது.

இதனால், கோபமுற்ற ரத்திக்கா ஒட்டப்பட்டியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து தனியாளாகத் தர்ணாவில் ஈடுபட்டார்.

காவல்துறையில் புகார்

இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கோசல்ராம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் ரத்திகா எழுந்து சென்றார்.

இதுகுறித்து ரத்திகாவிடம் காவல்துறை விசாரணை செய் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியின் உறவினரான கோபி என்பவரிடம் டிரைவராக கோசல்ராம் பணிபுரிந்து வருகிறார் எனவும் தகவல் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரியர் மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் செமஸ்டர் தேர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.