திருப்பத்தூர்: மரிமாணிக்ககுப்பம், நீலிக்கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் ராஜூ (60). இவர் மூன்று மாடுகள் மற்றும் இரண்டு எருமை மாடுகள் வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் நீலிக்கொல்லி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மாடு மேய்ப்பது வழக்கம். வழக்கம் போல் மாடு மேய்க்கச் சென்ற பொழுது, அதே பகுதியை சேர்ந்த சில மர்ம நபர்கள் காட்டுப்பகுதியில் உள்ள காட்டுப் பன்றிகளை பிடிக்க வாய் வெடி என கூறப்படும் நாட்டு வெடிகுண்டுகளை மண்ணில் புதைத்து வைத்துள்ளனர்.
எதிர்பாராத விதமாக அந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மாட்டின் வாய் சிதறியது. இந்த விபத்தில் மாட்டின் கீழ் தாடை பெருமளவு சேதமடைந்துள்ளது. இதனால் உணவு உண்ன முடியாத நிலை உள்ளது.
காட்டுப் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைப்பதால் எதிர்பாராத விதமாக மனிதர்கள் மிதித்து உயிரிழக்கும் அபாயமும் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து ராஜூ அளித்த புகாரின் பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காட்டு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்த மர்மநபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாபர் மசூதி இடிப்பு தினம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு