ETV Bharat / state

தனியார் கல்குவாரி வாகனம் மோதியதில் 2 வயது குழந்தை உயிரிழப்பு - tamilnadu latest news

திருப்பத்தூர்: தனியார் கல்குவாரி வாகனம் மோதியதில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது.

2 வயது குழந்தை உயிரிழப்பு
2 வயது குழந்தை உயிரிழப்பு
author img

By

Published : Jan 29, 2021, 10:10 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்திபன்-மீனா தம்பதி. இவர்களுக்கு தர்ஷன் என்ற இரண்டு வயது குழந்தை உள்ளது. இந்நிலையில், குழந்தை வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றபோது, தனியார் கல்குவாரி வாகனம் மோதியதில் குழந்தை தலை நசுங்கி உயிரிழந்தது.

இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது பொதுமக்கள் குழந்தையின் சடலத்தை கொடுக்க மறுத்தனர். மேலும் தனியார் கல்குவாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து குழந்தையின் சடலம் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: 108 ஆம்புலன்ஸ் வர தாமதம்: குழந்தை உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.