வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் அமைந்துள்ளது ஆண்கள் மத்திய சிறை. இங்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆயுள் கைதிகள் பரோலில் செல்ல அனுமதிக்கப்படுவர்.
அதேபோல நடப்பு ஆண்டிலும், ஆயுள் கைதிகள் பலர் பரோலில் செல்ல விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் தகுதிவாய்ந்த 20 கைதிகளுக்கு மூன்று முதல் ஐந்து நாள்களுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆண்கள் மத்திய சிறையில் உள்ள கைதிகள் இன்றும் நாளையும் தங்களது வீடுகளுக்குச் செல்கின்றனர். மேலும் இவர்கள் பரோல் முடிந்து மாலை 6 மணிக்குள் சிறைக்குத் திரும்ப வேண்டும்.
இதையும் படிங்க: கோவை மத்திய சிறைப் பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள் திறப்பு