திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தகரகுப்பம், நாயுன செருவு வழியில் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் சுமதி, வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த மினி வேன் ஓட்டுநர், அலுவலர்களைக் கண்டதும் வேனை சாலையிலேயே நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
உடனடியாக அந்த வேனை பறிசோதித்தபோது, அதில் ஆந்திராவிற்கு கடத்தவிருந்த 2 டன் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடனடியாக வேனைப் பறிமுதல்செய்த அலுவலர்கள் 2 டன் ரேசன் அரிசியை வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.