ETV Bharat / state

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர்கால சண்டிகேசுவரர் சிற்பம் கண்டுபிடிப்பு

author img

By

Published : Jan 22, 2022, 10:41 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர்கால சண்டிகேசுவரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர்கால சண்டிகேசுவரர் சிற்பம் கண்டுபிடிப்பு
1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர்கால சண்டிகேசுவரர் சிற்பம் கண்டுபிடிப்பு

திருப்பத்தூர் : தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு மற்றும் சமூக ஆர்வலர் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர்கால சண்டிகேசுவரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முனைவர் ஆ.பிரபு கூறியதாவது, "குருசிலாப்பட்டு ஊராட்சியில் நடைபெறும் சாலை விரிவாக்கப்பணியின் போது மண்ணில் புதையுண்டிருந்த இரண்டு சிற்பங்கள் ஜே.சி.பி. எந்திரத்தினால் வெளிப்பட்டுள்ளன.

இது குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் சண்முகம் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு கள ஆய்வு மேற்கொள்டோம். அப்போது உடைந்த நிலையில் இருந்த நடுகல் ஒன்றும் பழமையான சண்டிகேசுவரர் சிற்பமும் அங்கிருப்பதை உறுதி செய்தோம். திருப்பத்தூர் மாவட்டத்தில் சோழர்கால கண்டிகேசுவரர் சிற்பம் கிடைத்திருப்பது சிறப்புக்குரியது.

சண்டிகேசுவரர்
விசாரசருமன் என்ற இயற்பெயரைக் கொண்ட சண்டிகேசுவரர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டவர். ஒரு முறை இடையர் குலச் சிறுவன் ஒருவன் தனது பசுக்களை அடிப்பதைக் கண்டு, கோபம் கொண்ட விசாரசர்மர் தானே பசுக்களை மேய்க்கத் தொடங்கினார். பசுக்களிடம் பாலைக் கரந்து அதனை சிவபூசைக்கு பயன்படுத்தினார். இதனால் பசுவின் உரிமையாளர்கள், விசாரசருமரின் தந்தையிடம் சென்று முறையிட்டார்கள். விசாரசருமர் மண்ணால் லிங்கத்தினைச் செய்து, பசுவின் பாலால் அபிசேகம் செய்தார். அதனை நேரில் கண்ட தந்தைக்கு மண்ணில் பாலை ஊற்றி வீணாக்குகின்றானே என்று நினைத்துப் பூசையைத் தடுக்கச் சென்றார்.

விசாரசருமர் தவத்தில் இருந்தபோது சிவபெருமானிடத்தில் தன்னை மறந்திருந்தமையால், தந்தையின் வருகையை அறியாதிருந்தார். அதனால் கோபம்கொண்டு, சிவ அபிசேகத்திற்கு வைத்திருந்த பாலை அவரது தந்தை தட்டிவிட்டார்.

சிவநிந்தனை செய்த தன் தந்தையைத் தண்டிக்கும் பொருட்டு அருகிலிருந்த குச்சியை எடுத்து விசாரசருமர் வீச, அது பக்தியால் மழுவாக மாறி அவர் தந்தையின் கால்களை வெட்டியது. விசாரசருமர் தனது பூசையை தொடர்ந்தார்.

சோழர்கால சண்டிகேசுவரர் சிற்பம் கண்டுபிடிப்பு

இதனைக் கண்ட சிவபெருமான், அவர் முன் தோன்றி தனக்குச் சமர்ப்பிக்கும் அனைத்திற்கும் உரியவனாகும் (தனாதிபதி) சண்டேசுவர பதவியை அளித்தார். அதன் பின் விசாரசருமர் சண்டேசுவர நாயனார் என்று 63 நாயன்மார்களுள் ஒருவராக அழைக்கப்படுகிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செய்திகளுக்கு உரிய இச்சிற்பம் 2 ½ உயரமும் 1 ¼ அடி அகலமும் கொண்டது.

சோழர்காலத்தை சேர்ந்ததாகக் கருதப்படும் இச்சிற்பம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 1000 ஆண்டுகளைக் கடந்ததால் தேய்மானமும் உராய்வும் ஏற்பட்டுக் காணப்படுகின்றது.

வில்வீரனின் நடுகல்
இங்கு நடைபெற்ற சாலை விரிவாக்கப் பணியில் மண்ணில் புதையுண்டு மீட்கப்பட்ட நடுகல் ஒன்றும் கிடைத்துள்ளது. இந்நடுகல்லானது கீழ்ப்பகுதி உடைந்த நிலையில் கிடைத்துள்ளது. அதனை நகர்த்தி ஒழுங்குபடுத்தி வைத்துப் பார்த்த போது 5 ½ அடிநீலமும் 3 அடி அகலமும் கொண்ட நடுகல் என்பது தெரியவந்தது. இதில் வீரன் தன் வலது கையில் வில்லும் இடது கையில் அம்பும் ஏந்திய நிலையில் காணப்படுகிறார். தலை உச்சியில் வாரி முடித்துக் கட்டிக் கொண்டையிட்ட நிலையில் உள்ளார்.

அவரது இடது புறம் குத்து விளக்கும், கெண்டியும் கட்டப்பட்டுள்ளது. இவர் வில் வீரனாகத் திகழ்ந்திருக்க வேண்டும். இப்பகுதியில் நடைபெற்ற பூசலில் போரிட்டு இறந்தவராக இருக்கக்கூடும். அவரது வீரத்தினைப் பறைசாற்றும் விதமாக நடுகல் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நடுகல் வழிபாட்டில் இருந்து பின்னர் கைவிடப்பட்டு மண்ணில் புதையுண்டு போனதாகும். இது கி.பி. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும்.

இவ்விரு சிற்பங்களும் இங்குள்ள திரெளபதியம்மன் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வரலாற்றுப் பின்னணியை மக்களுக்கு எடுத்துக் கூறி இவற்றை பாதுகாத்திடுமாறு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு இச்சிற்பங்களை உரிய முறையில் பாதுகாத்திட ஆவண செய்திடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : ஐந்து நாள்களாக போக்குகாட்டி வந்த சிறுத்தை சிக்கியது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.