திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், திருமாஞ்சோலை பகுதியில் ராஜ்குமார் என்பவர் வீட்டில் சாராய பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நகர காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜ்குமார் வீட்டில் சோதனை செய்தபோது, பாத்ரூமில் மறைத்து வைத்திருந்த 100 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்த ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: