ETV Bharat / state

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் இளைஞர் கொலை.. தூத்துக்குடியில் நடந்தது என்ன? - Youth hacked to death money issue in thoothukudi

Thoothukudi Murder: பண விவகாரத்தில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட ஜெகன் ராஜ்
கொலை செய்யப்பட்ட ஜெகன் ராஜ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 12:42 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தெர்மல் நகர், லேபர் காலனியைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் ஜெகன் ராஜ் (33). கொத்தனார் வேலை செய்யும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த இருளாண்டி மகன் நவநீதன் (30) என்பவரிடம் ரூபாய் 40 ஆயிரம் பணம் கடனாக கொடுத்து உள்ளார். இதனை அடுத்து ஜெகன் ராஜ், நவநீதனிடம் பணத்தை திருப்பிக் கேட்டதால், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று (டிச.11) மாலை லேபர் காலனியில் உள்ள தனியார் ஆயில் மில் அருகே வந்து கொண்டிருந்த ஜெகன் ராஜை, நவநீதன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கூரியா மகன் செல்வன் (29) ஆகிய இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்து உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த தெர்மல் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ரவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஜெகன் ராஜ் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், நவநீதன் மற்றும் செல்வன் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பண விவகாரத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த காவலர்.. போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.