தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் செயல்படவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் மட்டுமே மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் இன்னும் களையப்படவில்லை. வறுமையின் காரணமாக பல மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறி வருகின்றனர்.
இந்நிலையில் குமரகிரியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவி ஒருவர், இந்த ஆண்டு கரிசல்குளம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்துள்ளார். அப்போது மாணவியின் ஏழ்மை நிலை குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர்குமாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மாணவியின் நிலை குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் பரிமளாவிடம், சங்கர்குமார் தெரிவித்துள்ளார்.
மாணவிக்கு புது அலைபேசி
உடனடியாக மாணவியின் வீட்டிற்கு விரைந்த அலுவலர் பரிமளா, ஆன்லைன் வகுப்புகளை படிக்கும் வகையில் மாணவிக்கு புது அலைபேசியை வாங்கிக் கொடுத்துள்ளார்.
மேலும் மாணவியின் வீட்டுக்கே வந்து பாடம் நடத்துமாறும் ஆசிரியர்களை, அலுவலர் பரிமளா அறிவுறுத்தினார்.
மாணவியின் தேவை அறிந்து உதவிய ஆசிரியர், அலுவலருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழும் தனது மேல் படிப்புக்கு அரசு உதவ வேண்டும் எனவும் மஞ்சுளா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ’போலி மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்கும் மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை’