ETV Bharat / state

பனைத்தொழிலின் மகத்துவத்தை அடுத்த தலைமுறை அறியுமா? - tuticorin update news

தூத்துக்குடி: அடுத்த தலைமுறைக்கு பனைத் தொழிலை எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது, இந்தச் சிறப்புத் தொகுப்பு.

பனைத் தொழிலின் மகத்துவத்தை அடுத்த தலைமுறை அறியுமா?

author img

By

Published : Apr 30, 2020, 9:17 AM IST

Updated : May 2, 2020, 10:56 AM IST

உலகின் மற்ற நாடுகளில் காணப்படாத பல சிறப்புகள் தமிழர்களிடம் காணப்படுகிறது. அதில், பனைத் தொழிலுக்கும் தனி இடமுண்டு. பிற நாடுகளிலும் இந்தத் தொழில் காணப்பட்டாலும், தமிழ்நாட்டில், வெறும் தொழிலாக மட்டும் குறுக்கிவிட முடியாது. பனைமரத்திலிருந்து உருவாகும் ஒவ்வொரு பொருளுக்கும், அதன் இயல்பிலேயே கலைத்தன்மை வந்துவிடும். பனைமரத்தின் நுனியிலிருந்து, வேர் வரை அனைத்தும் மக்களுக்குப் பயனளிக்கக் கூடியது. பூமிக்கு வாய்த்த கற்பகத்தரு என்றே, பனைமரத்தைக் குறிப்பிடலாம்.

கலைப் பொருள்களாக உருமாறும் பனைமரம்

வெப்பம் தணிக்கும் பனைமரத்தின் பகுதிகளைக் கொண்டு நார்க்கட்டில், கூடை, ஓட்டுநர் இருக்கை, நாற்காலி, நார்ப்பெட்டி, ஊஞ்சல், பாய் உள்ளிட்ட பொருள்கள் செய்யலாம். இதிலிருந்து கிடைக்கும் ஓலைகளில் வீட்டுக்கு கூரை வேயலாம், பனை விசிறி செய்யலாம். பனை ஓலைகளில் கொழுக்கட்டையும் செய்யலாம்.

பனை மரக்கட்டைகளை, ஓட்டு வீட்டில் பயன்படுத்தலாம். முதிர்ச்சியடைந்த பனைகளில் பனஞ்சட்டங்களும், அதனுடைய அடிப்பகுதியை செங்கல் சூளைகளுக்கு விறகாகவும் பயன்படுத்துகின்றனர். கிராமங்களில், இன்றளவும் பனை மட்டைகள் வேலியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பனை ஓலையால் அமைக்கப்பட்ட வேலி
பனை ஓலையால் அமைக்கப்பட்ட வேலி

மருத்துவக் குணம்வாய்ந்த பனைமரம்

  • நுங்கு, பதநீர் போன்றவற்றில் நீர்ச்சத்து மிகுந்து காணப்படுவதால், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். சின்னம்மை, அரிப்பு போன்ற நோய்களிலிருந்து தற்காக்கும்.
  • பனம் பழம், பனங்கிழங்கு, பனங்குருத்து போன்றவை, கோடைகாலத்தில் சிறந்த உணவாகின்றன. பதநீரிலிருந்து எடுக்கப்படும், பனை வெல்லம், கற்கண்டு, கருப்பட்டி போன்றவை மருத்துவ குணம் கொண்டவை.

நார்க் கட்டிலின் தனிச்சிறப்பு

  • பிரசவமான பச்சை உடம்புப் பெண்களுக்கு நார்க் கட்டிலிலே உகந்தது.
  • நோயுற்றிருக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும் இது வசதியான ஒன்றுதான்.
  • மூலம் போன்ற வெப்பம் சார்ந்த நோய்களுக்கு நார்க்கட்டில் ஏற்றது.
    பனை நார்க் கட்டில்
    பனை நார்க் கட்டில்

பனை நார்க்கட்டிலில் அசைவாடும் பழைய நினைவுகள்!

தமிழ்நாட்டில் 90-களில் பிறந்த பெரும்பாலான குழந்தைகளுக்கு பனை நார்க்கட்டில் குறித்த அனுபவமிருக்கும். சிறுவயதில் குளிப்பாட்டியதும், பாட்டிமார்கள் தங்களின் பேரக் குழந்தைகளைப் பனை நார்க்கட்டிலில் கிடத்தி சாம்பிராணிப் புகை போடுவார்கள்.

இந்தக் கட்டிலோடு ஒன்றிய மற்றொரு நகைச்சுவையான நினைவும் உண்டு. தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு, பல வீடுகளில் நார்க் கட்டில்களில்தான் படுக்கை. இதனால், குழந்தையின் தாய்க்கு சுத்தம் செய்வது எளிதாகயிருக்கும்.

பனை நார்க்கட்டில்கள் சிறந்து விளங்க என்ன காரணம்?

பிளாஸ்டிக், இரும்பு கட்டில்கள் வெப்பத்தை அதன் பரப்பிலேயே தக்கவைத்து, நமது உடலில் கடத்தவல்லது. ஆனால், பனை நார்க்கட்டில்கள், நமக்கு உற்ற தோழன். இதனுடைய நெகிழும் தன்மை, இந்தக் கட்டிலில் இடப்பட்டிருக்கும் துளைகள் வழியாக வரும் காற்றோட்டம், உலகில் வேறு எந்த வகையான கட்டிலிலும் பெறமுடியாது.

பனை நார்க்கட்டில்கள் எப்படிச் செய்கிறார்கள்?

முதல்கட்டமாக, கட்டிலின் மூலப்பொருளான நார் பிரித்தெடுக்கப்படுகிறது. அதற்காக, பனை மட்டையின் உள்புறமிருக்கும், அகணி நாரைத் தனியாகப் பிரித்து, வெயிலில் உலரச்செய்து, நீரில் ஊறவைக்க வேண்டும். ஒரே சீராக வகிர்ந்து எடுத்த நாரை, கட்டில் சட்டங்களில் பின்னி எடுப்பதுதான் பனை நார்க்கட்டில்.

இடதும், வலதுமாகப் பின்னப்படும், கட்டில் பின்னலுக்கு சக்கரக் கண்ணி என்று பெயர். மனிதர்களின் உயர்த்திற்கேற்ப, நான்கு முதல் 5 அடி நீளம் மட்டுமே பின்னப்படும் இந்த நார்கள், முடிச்சுகளால் இணைக்கப்படுகின்றன. ஆனால், வருடக்கணக்கில் உழைக்கக் கூடிய தரம் கொண்டது.

பனைமரங்கள்
பனைமரங்கள்

இப்படியாக, நான்கு கட்டைகளுக்கு மத்தியில், பனை நார்க் கட்டில்களை, லாவகமாகப் பின்னி விற்று பிழைப்பு நடத்திவந்த பனைத் தொழிலாளர்களும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் பாரம்பரியத் தொழில்களை மறந்ததால், பனைத் தொழிலாளர்கள் நலிவடைந்தார்கள்.

பனையேறும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து, சொற்ப அளவிலே பனைத் தொழில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், பனைத் தொழிலாளர்களை மேலும் நசுக்கிவிட்டது, ஊரடங்கு. தமிழ்நாட்டில், எல்லா தொழில்களுக்கும் ஒரு பாரம்பரியம் இருக்கும். அப்படியான தொழில்களை, நிகழ்கால தலைமுறை, தனக்கடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுத்து, வாழையடி வாழையாக வளரும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், நாசரேத், சாத்தான்குளம், உடன்குடி, திசையன்விளை, ஏரல், ஒட்டப்பிடாரம், அந்தோணியார்புரம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் பனைத்தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்துவருகின்றனர். கோடைகாலத்தில் இறக்கும் பதநீர் விற்பனை மூலமாக கிடைக்கும் வருவாயே இவர்களின் மிக முக்கியமான வாழ்வாதாரம். இது 20000-களின் நிலை.

இதையடுத்து, பதநீர் போன்ற இயற்கை பானங்களை குளிர்பானங்களும், பனை ஓலை பெட்டி, கூடை உள்ளிட்ட பனைப் பொருள்களை நெகிழிப் பொருள்களும் தொழில்நுட்பவியல் யுகத்தில் நிரப்பிவிட்டன. இதனால், பல வருடங்களாகவே பனைத் தொழிலாளர்கள் சிரமப்பட்டுவந்தனர். இந்நிலையில், ஊரடங்கு அவர்களின் மீது பெரிய பாரத்தை வைத்திருக்கிறது.

இது குறித்து, பனை நார்க்கட்டில் பின்னும் தொழிலாளி செல்லத்துரை, “தூத்துக்குடி மாவட்டத்தில், பனைத்தொழிலைப் பரம்பரைத் தொழிலாக மக்கள் செய்தனர். அந்தக் காலத்தில், பனையோலை தொழிலாளர்கள் அதிகம் உண்டு.

பனையோலைத் தொழிலை, இரண்டரை ரூபாய் முதல் மூன்றரை ரூபாய் கூலி வரை பெற்றுக்கொண்டு செய்துவந்தனர். அப்போது, பனையோலைப் பொருளுக்குத் தேவை அதிகம் இருந்ததில்லை. தற்போது, தேவை அதிகரித்துள்ள நிலையில், தொழிலாளர்கள் இல்லை.

பனை மரத்திலிருந்து உருவாக்கப்பட்ட பொருட்கள்

இன்றைய தேதிக்கு, பனை நார்க்கட்டில் செய்யும் ஒரு தொழிலாளிக்கு நாளுக்கு 600 ரூபாய் கூலி வருகிறது. கட்டடத் தொழிலாளியின் கூலியைவிட 100 ரூபாய் குறைவு. மூன்று நாள் அதிகாலை தொடங்கி அந்தி சாயும்வரை உழைத்தால், ஒரு நார்க்கட்டிலை தயார் செய்துவிடலாம். தேவையின் அடிப்படையில், பனைநார் கட்டிலின் நீள, அகலத்தை அளவீடு செய்து உருவாக்கிவிற்கிறோம்.

சாதாரணமாக ஏழாயிரத்து 500 ரூபாய்க்கு பனைநார் கட்டில் தயார் செய்து கொடுத்துவருகிறோம். இந்த விலையை கேட்பவர்கள், பர்னிச்சர் கடையில் தயார் நிலையில் தரப்படும் இரும்புக் கட்டிலை, மெத்தையுடன் வாங்கலாம் என விமர்சனம் செய்கின்றனர். இரும்புக் கட்டிலில் ஏது மருத்துவப் பயன்?” என வாடிக்கையாளரை வஞ்சிக்காத மிதமான குரலில் கேட்கிறார்.

ஊரடங்கால் ஏற்பட்ட சிக்கல்கள்

பனை நார்க்கட்டிலுக்குத் தேவையான மூலப்பொருள்கள் தென்காசி, திருச்செந்தூர், உடன்குடி, ஏரல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்துதான் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகக் கிடைத்தது. தற்போது, ஊரடங்கினால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதால், சரக்குகள் வருவதில்லை. கையிருப்பில் உள்ள சரக்குகளைக் கொண்டு, ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆர்டரை செய்யும் நிலையில் இருக்கிறார்கள், பனைத் தொழிலாளிகள்.

பனை நார்களைக் கொண்டுசெய்யும் தொழில் சற்று வேலைப்பாடு அதிகம். அதனால், பனை நார் தொடர்பான தொழில்கள் அவ்வளவு பிரசித்திப் பெறவில்லை. ஆனாலும், மருத்துவக் குணங்கள் செறிந்த பனை நார் தொழிலும் அவசியமானதுதான்.

இது குறித்து செல்லத்துரை கூறும்போது, "இந்தத் தொழில் முன்னைப் போலில்லாமல், மக்களின் அறியாமையால் கடுமையான பின்னடைவைச் சந்திக்கிறது. அதனை அரசு தனிக்கவனம் எடுத்து மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும்.

கரோனா பாதித்துள்ள இந்தச் சமயத்தில் பனைத் தொழிலாளர்களுக்கு, அதிகபட்ச ஊக்கத்தொகை அளித்து பாதுகாப்பதுடன், இத்தொழிலை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவும் வழிவகுக்க வேண்டும்" என்றார்.

பனைத் தொழிலை ஏன் அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும்: சிறப்புத் தொகுப்பு

வளர்ச்சி என்ற பெயரில் தொழில்நுட்பத்தையும், அழகு என பல வண்ணங்களில் நெகிழியையும் நோக்கி ஓடாமல், பாரம்பரிய பனைப் பொருள்களுக்கு ஆதரவளிப்பதே, தலைமுறை இடைவெளியை நிரப்பும். பனை பொருள்களின் மகத்துவமும், மானுட இருப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. காலத்தின் அவசியம் பனைத் தொழில்!

இதையும் படிங்க: கரோனா இல்லா கொடைக்கானலின் ரகசியம் என்ன?

Last Updated : May 2, 2020, 10:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.