ETV Bharat / state

டிஜஜி விஜயகுமார் தற்கொலை வழக்கை சிபிஜ விசாரிக்க வேண்டும்: டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தல் - சிபிஜ

தமிழ்நாட்டில் பல்வேறு அமைச்சர்கள் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கின்ற இந்த நிலையில், கோவையில் டிஐஜி தற்கொலை செய்த சம்பவம் அந்த சம்பவங்களோடு தொடர்பு இருக்கின்றதா? என்ற கோணத்தில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

krishnasamy
கிருஷ்ணசாமி
author img

By

Published : Jul 7, 2023, 5:50 PM IST

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 15 மதுபான பாட்டில் உடைப்பு போராட்டம் தொடர்பாக பேசுகையில், தமிழ்நாட்டில் ஏறக்குறைய 30 ஆண்டு காலத்துக்கு மேலாக அமலில் இருந்த பூரண மதுவிலக்கு 1971 ஆம் ஆண்டுக்கு பிறகு தளர்த்தப்பட்டது. அதன் விளைவாக, முதல்முறையாக சுதந்திரத்திற்கு பிறகு இளைய தலைமுறையினர் மதுவினுடைய வாடையை நுகர ஆரம்பித்துள்ளனர்.

1974ம் ஆண்டுக்கு பின் மீண்டும் பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், 1981லிருந்து மாறி, மாறி மதுவிலக்கு தளர்த்தப்படுவதும், அமல்படுத்தப்படுவதுமாக நடைமுறைகள் ஏற்பட்டு கடந்த 30 வருடங்களாக தமிழ்நாட்டில் மதுவிலக்கு தளர்த்தப்பட்ட நிலையில் டாஸ்மாக் நிறுவனமே அதனுடைய ஏகபோக விற்பனையாளர்களாக இருந்து வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின்பு ஒளிந்து மறைந்து மதுபானங்களை அருந்தியவர்கள் நிலை மாறி இப்பொழுது பட்டவர்த்தனமாக பள்ளி மாணவர்கள், மாணவிகள், பெண்கள் என்ற நிலை மாறி அனைவரும் மது அருந்தக்கூடிய நிலை உருவாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் தற்போது நிலவரப்படி 60 சதவீதம் பேர் மது அருந்தக் கூடியவர்களாக இருக்கின்றன. மது என்பது உணவும் அல்ல, மருந்தும் அல்ல. அது ஒரு விஷத்தை போன்றது. மது அருந்துவதால் 200க்கும் மேற்பட்ட வியாதிகள் உருவாகின்றது. இது பொது மக்களுக்கு தெரிவதில்லை. அரசு நன்கு அறிந்திருந்தும் பொது கொள்கை ரீதியாக நாங்கள் மதுவிலக்கு தான் கடைப்பிடிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு உண்டான நடவடிக்கை என்பது தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பக்கம் மதுவினால் அருந்தக்கூடியவர்களுக்கு உடல்நல கேடு இருக்கிறது. இன்னொரு பக்கம் குடும்பத்திற்குள் பல்வேறு சண்டை சச்சரவு உருவாக்குகிறது.

மேலும், டாஸ்மாக்கில் ஏற்படக்கூடிய ஊழலால் தமிழக மக்களுடைய உழைப்பு வியர்வை ரத்தம் மிகப்பெரிய அளவுக்கு சுரண்டப்படுகிறது. டாஸ்மாக்கில் நடைபெறக்கூடிய ஊழல் குறித்து திரட்டிய தகவல் அடிப்படையில் கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் ஒரு லட்சம் கோடிக்கு மேலாக நடைபெற்று இருக்க கூடிய உழல் வெளிவந்திருக்கிறது. அதைத்தான் மே மாதம் 10ம் தேதி ஆளுநரிடத்தில் மனுவாக அளித்தோம்.

ஒரு காலத்தில் மது விற்பனை, சில்லறை விற்பனை கடைகள் மட்டும் விற்று கொண்டிருந்த நிலையில், மது அருந்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பாரிலும் 24 மணி நேரம் விற்பனையானது, சந்துகள், போந்துகளிலும் சில்லறை விற்பனை நடைபெற்று வருகிறது. கிராமங்கள், வயல்வெளிகள் இருசக்கர வாகனங்கள் வீடுகளில் கூட விற்பனை என்ற ஒரு நிலைமை உருவாகி இருக்கிறது. எனவே இதனைத் தடுத்து நிறுத்தவில்லை என்றால் தமிழ்நாடு ஒரு மது மயக்கத்திற்கு ஆளாக கூடிய நிலைமைக்கு உண்டாகும். இது தமிழ்நாட்டு மக்களை இளைஞர்களை மீட்டெடுக்க முடியாத ஒரு மோசமான சூழ்நிலை உருவாகும்.

தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்து இருக்கின்றோம். ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு எங்கும் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து மதுபான கடைகளில் முன்பும், குறிப்பாக பெண்களுடைய தலைமையில் மதுபான பாட்டில்கள் உடைப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது.

கோவையில் டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது சம்பந்தமாக பேசுகையில், மூத்த ஐபிஎஸ் அதிகாரி கீழ் பணிபுரிய கூடிய ஒருவரின் துப்பாக்கியை வாங்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர், ஒரு ஐபிஎஸ் அதிகாரி என்று சொல்லக்கூடியவர்கள் பல்வேறு விதமான தேர்வுகளை கடந்து தான் இந்த பதவியை அடைகிறார். நிச்சயமாக மன வலிமையோடு இருப்பதற்கு உண்டான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கும்.

இப்போது டிஐஜி என்ற ரேங்க் வரும் போது குறைந்தது பத்து வருடங்களுக்கு குறைவில்லாமல் பணியாற்றி இருக்க வேண்டும். இப்போது அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்றுதான் அவரின் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது அவருக்கு பணியில் எந்த விதமான அழுத்தங்கள் இருந்திருக்கும். அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ள காரணத்தை நிச்சயமாக சரியாக கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, இது மன அழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை, என்ற சொத்தை காரணங்களை சொல்லி இந்த நிகழ்வை மூடி மறைக்க முயலக் கூடாது. இதற்குள் வேறு ஏதோ முக்கியமான காரணம் இருக்கின்றது. அவர் தற்கொலைக்கு தள்ளிவிடப்பட்டு இருக்கிறாரே தவிர தானாக தற்கொலை செய்ய வாய்ப்பில்லை என்பது எனது கனிப்பாக்கும்.

திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணு பிரியா என்ற பெண்மணி ஏறக்குறைய ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரித்துக் கொண்டிருந்தபோது அந்த வழக்கை உண்மை தன்மை வெளியே வரக்கூடாது என்பதற்காகவே தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டார். அதுபோல இந்த விஜயகுமார் தற்கொலை நிகழ்விலும் எதுவும் சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் இருந்து விடக்கூடாது. அதனை வெளியே கொண்டு வந்தால் தான் எதிர்காலத்தில் இதுபோன்று காவல்துறையிடத்தில் மட்டுமல்ல வேறு எந்த அரசு அதிகாரி இடத்திலும் இந்த நிகழ்வு நடக்காமல் இருக்கும். ஏனென்றால் அண்மைக்காலமாக அதிகாரிகளின் ரோல் எல்லாமே கட்சிக்காரர்களே எடுத்துக் கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக ஆளுங்கட்சி (திமுக) இந்த ரோலை முழுமையாக எடுத்துக் கொண்டு வருகின்றனர். தவறு செய்வதற்கு மட்டும் அதிகாரிகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். தப்பிக்க முடியாமல் இருக்கும்போது அதிகாரிகளை பலிகாடு ஆக்குகிறார்கள். அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு அமைச்சர்கள் மிகப்பெரிய குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கின்றனர். எனவே அந்த சம்பவங்களோடு தொடர்பு இருக்கின்றதா? என்ற கோணத்தில் சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்பொழுது தான் உண்மையை வெளி கோணற முடியும் என்பதே உணர்கிறேன்.

ஆளுநர் அரசியல் பேசலாமா என்ற கேள்விக்கு? ஆளுநர் கட்சி அரசியல் பேசக்கூடாது. பொதுவான நடப்புகளை பற்றி பேச வேண்டும். கட்சி அரசியல் என்பது ஒரு கட்சியோடு சேர்ந்து அந்த கட்சியினுடைய கொள்கையை பிரதிபலிக்கக் கூடிய வகையில் ஆளுநர் பேசக்கூடாது தவிர பொதுவான நாட்டு நடப்புகள் ஜனநாயகத்தைப் பற்றி பேச்சுரிமை பற்றி எழுத்துரிமை, கருத்துரிமை பற்றி மக்களுடைய வாழ்வு நிலைமை பற்றி கண்டிப்பாக பேசவேண்டும். அதற்கு வாய்ப்புட்டு போட வேண்டிய அவசியம் கிடையாது" என்று கூறினார்.

இதையும் படிங்க: மன அழுத்தத்தால் தான் டிஐஜி தற்கொலை செய்துள்ளார் - ஏடிஜிபி அருண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.