ETV Bharat / state

‘நடிகர் விஜய் இதற்கெல்லாம் அஞ்சக்கூடாது’ - சீமான் அறிவுரை - ntk seeman

தூத்துக்குடி: ‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்காக வன்மம் வைத்து அதிமுக அரசு தற்போது அவரது திரைப்படத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

seeman
author img

By

Published : Oct 24, 2019, 11:12 AM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். அப்போது, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நடிகர் விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக்கொண்டு தான் தமிழ்நாடு அரசு அவரை பழிவாங்குகிறது.

விஜய் பேசிய கருத்துக்கு பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து விட்டார்கள். அதன் பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்வது நன்றாக இருக்காது. அரசின் இந்தச்செயல் இன்றைய தலைமுறையினரிடையே ஜனநாயகத்தின் மீது வெறுப்பை உண்டாக்கும். செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

நடிகர் விஜய் இதற்கெல்லாம் பயப்படக்கூடாது - சீமான்

இதனால் அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது" என்றார்.

மேலும், கோதுமை, பார்லி உள்ளிட்ட பொருட்களுக்கு அகவிலை உயர்த்தப்படுவது குறித்து சீமான் கூறுகையில், "வரிவிதிப்பு, நாட்டை குட்டிச் சுவராக்கிவிட்டது. வரி விதிப்புக்கு எதிராக நாங்கள் போராடியபோது தேசத்துரோகி என்று கூறினார்கள்.

அடித்தட்டு மக்களைப்பற்றி ஆட்சியாளர்கள் சிந்திப்பதே இல்லை - சீமான்

இந்த ஆட்சியாளர்கள் நம்மை வாங்கும் திறனற்ற மக்களாக மாற்றிவிட்டார்கள். பண்டிகை நாட்களில் 200 விழுக்காடு விற்பனையான இடத்தில் தற்போது 80 விழுக்காடு தான் விற்பனையாகிறது. அடித்தட்டில் உள்ள 60 விழுக்காடு மக்களைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. பெரும் முதலாளிகளின் நலனை கருதில் கொண்டே இவர்கள் செயல்படுவார்கள். ஆகவே கோதுமை, பார்லி விலை உயர்வை பற்றி நாமெல்லாம் சிந்திக்கவே முடியாது'' என்றார்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கிய தமிழக அரசு!

Intro:பிகில் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதற்கு வன்மம் வைத்து அரசு பழிவாங்குகிறது - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டிBody:பிகில் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதற்கு வன்மம் வைத்து அரசு பழிவாங்குகிறது - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

தூத்துக்குடி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை தூத்துக்குடி தூத்துக்குடி விமானம் மூலம் வந்தார். தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்

நடிகர் விஜய் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதற்கு வன்மம் வைத்துக் கொண்டு தான் தமிழக அரசு பழிவாங்குகிறது. விஜய் பேசிய கருத்துக்கு எதிர் கருத்துக்களை பலரும் தெரிவித்து விட்டார்கள். அதன் பின்னரும் பழிவாங்கும் நோக்கத்தோடு படத்துக்கு இடையூறு செய்வது நன்றாக இருக்காது. இதனால் இன்றைய தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு உண்டாகி விடும்.
செல்வாக்கு பெற்ற கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது இதனால் அதிகாரத்தினர், அவர்களுக்கு எதிராக எதிர்வினையாற்றுகிறார்கள். அச்சுறுத்த பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் நடிகர் விஜய் அஞ்சக்கூடாது.

காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு,
அது அதிகாரத்தின் வலிமை. அதிகாரத்திலுள்ள திமிரில் செய்வது என்றார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சு குறித்து கேட்கையில்,

அமைச்சர் கவனமாக பேசியிருக்கவேண்டும். மதம் என்பது மாறிக் கொள்ள கூடியது. ஆனால் இனம் என்பது மாறமுடியாது. அமைச்சர் என்பவரும் கண்ணியத்தோடும் கட்டுப்பாடும் பேசவேண்டும். வாக்கு செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் என எல்லோருக்கும் சேர்த்து தான் அவர் அமைச்சர். எனவே அவர் அப்படி பேசியிருக்க கூடாது என்றார்.

கோதுமை, பார்லி உள்ளிட்ட பொருளுக்கு அகவிலை உயர்த்தப்படுவது குறித்த கேள்விக்கு,

ஏழை,எளிய மக்களுக்கு எதுவுமே ஏற்புடையதல்ல. வரிவிதிப்பு, நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டது. வரி விதிப்புக்கு எதிராக நாங்கள் போராடியபோது தேசத்துரோகி என்று கூறினார்கள். வாங்கும் திறனற்ற மக்களாக நம்மை மாற்றிவிட்டார்கள். பண்டிகை நாட்களில் 200 விழுக்காடு விற்பனையான இடத்தில் தற்போது 80 விழுக்காடு தான் விற்பனையாகிறது. அடித்தட்டில் உள்ள 60 விழுக்காடு மக்களை பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. பெரும் முதலாளிகளின் நலன் கருதியே இவர்கள் செயல்படுவார்கள். ஆகவே கோதுமை,பார்லி விலை உயர்வை பற்றி நாமெல்லாம் சிந்திக்கவே முடியாது.
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது களையப்பட வேண்டும். மனிதர்கள் எல்லோரும் சமமென்பது கல்வியில் இருந்தே நாம் கற்பித்து வர வேண்டும் அதை நோக்கி அரசு செல்ல வேண்டும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.