ETV Bharat / state

கனிமொழிக்கு ஆதரவாக தூத்துக்குடியில் பரப்புரை நிகழ்த்திய வீரமணி

தூத்துக்குடி: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தூத்துக்குடியில் பரப்புரை நிகழ்த்தினார்

கீ.வீரமணி
author img

By

Published : Mar 28, 2019, 9:55 PM IST

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பரப்புரை செய்தார். இதனைத்தொடர்ந்து தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,

"இந்த தேர்தலில் கனிமொழி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்கவில்லை.
தமிழ்நாட்டை மீட்க வேண்டும் என்பதற்காகவும், இந்தியாவை காக்க வேண்டும் என்பதற்காகவும்தான் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் எனக் கூறுகிறேன். நாடுதோறும் பொள்ளாச்சி சம்பவங்களால் தலைகுனிவுதான் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் கொத்தடிமைகள் ஆட்சி நடைபெறுகிறது. தற்போது இந்தியாவில் மோடி வித்தை நடக்கிறது. அவர்களின் தேர்தல் அறிக்கையே தீராத விளையாட்டு பிள்ளைதான்.பெண்களுக்கு தொல்லைதான்.

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 4.50 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். நாட்டின் எல்லா இடங்களிலும் தாக்குதல் நடந்துள்ளது.பிரதமர் மோடி இளைஞர்களை மட்டுமல்ல, விவசாயிகளையும் ஏமாற்றியுள்ளார்.

இந்த தேர்தலில் பாஜக ஜெயித்தால் ஜனநாயகத்தின் சவபெட்டிக்கு ஆணி அடிப்பது போன்றது. அரசியல் கட்சியினர் எங்கு லாபம் என்று பார்த்து தேர்தலில் தங்களை விற்று கொள்கிறார்கள். பிரதமர் மோடி ஊழல்வாதிகளை வைத்துக்கொண்டே ஊழலை ஒழிப்போம் எனக் கூறுகிறார். நாட்டில் வேலைவாய்ப்பும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை" எனப் பேசினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து, தூத்துக்குடியில் இரவு 8 மணி அளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கி.வீரமணி கலந்து கொண்டு போசும்போது,

இந்ததேர்தலில் கனிமொழி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு வேண்டும் என கேட்கவில்லை.
தமிழ்நாட்டை மீட்க வேண்டும், இந்தியாவை காக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த தேர்தல்.
நாடுதோரும் பொள்ளாச்சி சம்பவங்களால் தலைகுனிவு தான் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் கொத்தடிமைகள் ஆட்சி நடைபெறுகிறது.

தற்போது இந்தியாவில் மோடி வித்தை நடக்கிறது. அவர்களின் தேர்தல் அறிக்கையே தீராத விளையாட்டு பிள்ளை தான்.
பெண்களுக்கு தொல்லை தான். இந்த தேர்தலில் பாஜக ஜெயித்தால் ஜனநாயகத்தின் சவபெட்டிக்கு ஆணி அடிப்பது போன்றது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 4.50 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். நாட்டின் எல்லா இடங்களிலும் தாக்குதல் நடந்துள்ளது.

பிரதமர் மோடி இளைஞர்களை மட்டுமல்ல, விவசாயிகளையும் ஏமாற்றினார். பட்ஜெட்டை சமாதியில் கொண்டுபோய் வைக்கின்றனர். ஒருபக்கம் ஆவியும், காவியும் இருந்துக்கொண்டு ஆட்டுகின்றனர். அரசியல் கட்சியினர் லாபம் எங்கு என்று பார்த்து தேர்தலில் தங்களை விற்று கொள்கிறார்கள். நாட்டில் வேலைவாய்ப்பும் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை. ஊழல் வாதிகளை வைத்துக்கொண்டே
ஊழலை ஒழிப்போம் என பிரதமர் மோடி கூறுகின்றார் என கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.