மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் 28ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக நகர கழக சார்பில், புதுரோடு சாலை, வேலாயுதபுரம், இளையரசனேந்தல் சாலை ஆகிய பகுதியில் உள்ள மதிமுக கொடியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வையாபுரி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ். கோவில்பட்டி மதிமுக நகர செயலாளர் பால்ராஜ். உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் வைகோ மகன் துரை வையாபுரி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு முதலமச்சராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினின் முதல் முன்னுரிமையாக கரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைதான் இருக்கும். அதற்குண்டான குழுவை தற்போது அமைத்துள்ளனர். பெரிய சவாலாக இருந்தாலுமே இந்த சவாலை சமாளிப்பார் என நாங்களும் நம்புகிறோம், மக்களும் நம்புகின்றனர்.
முந்தைய அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக எந்த செயல்பாடும் இல்லை. தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்கும் திமுக தலைவர் ஸ்டாலின் ஐந்து ஆண்டுகள் சிறப்பான திட்டங்களை வைத்துள்ளார். சிறப்பாக செயல்படுவார் என நம்பிக்கை உள்ளது. கோவில்பட்டி தொகுதியில், அதிமுக, அமமுக இரண்டு கட்சிகளுமே பணபலத்தால் வாக்குகளைப் பெற்றுள்ளனர். அதற்கு மேலாக ஜாதியை வைத்து இங்கு அரசியல் செய்தனர். இங்கு ஜாதிய பலமும் பணபலமும் வென்றுள்ளது.
இங்கு நின்ற சிபிஎம் வேட்பாளர் சினிவாசன் ஜாதி, பணத்துக்கு முன்பு நல்ல வேட்பாளர் தோற்றுள்ளார். இங்கு ஜனநாயம் கெடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க: முதல் முறையாக அமைச்சர் அந்தஸ்து பெறும் திருவெறும்பூர் தொகுதி