தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஊராட்சிக் குழுத் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமையில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் முத்துமாரி முருகேசன் தலைமையில் ஏழு உறுப்பினர்கள் பங்கேற்காமல் வெளிநடப்புச் செய்து கூட்ட அரங்கு முன்பாக தரையில் அமர்ந்து கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் பணிகள் ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அலுவலர்கள் உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாகத் தீர்மானங்களை நிறைவேற்றி கையெழுத்துகளை மட்டும் பெறுவதற்கு கூட்டங்களை நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தை புறக்கணித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தை புறக்கணித்து திமுகவினர் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.