தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று மாலை பள்ளி முடிந்த நிலையில் அப்பள்ளி வாகனத்தில் 31 மாணவர்கள், பெண் பள்ளி உதவியாளர் ஆகியோர் வீட்டிற்குச் சென்றனர்.
காமநாயக்கன்பட்டி அருகே உள்ள துறையூர் நோக்கி வாகனம் செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நான்கு மாணவர்கள், பெண் பள்ளி உதவியாளருக்கு படுகாயமும், 27 மாணவர்களுக்கு சிறு காயங்களும் ஏற்பட்டது.
உடனே சக வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து கொப்பம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசுப் பேருந்தில் இயந்திரக் கோளாறால் தீ விபத்து