ETV Bharat / state

பழைய பொருட்களில் ப்ளூடூத் ஹெட்செட் வடிவமைத்து அசத்திய மாணவன்!

author img

By

Published : May 7, 2020, 10:07 AM IST

தூத்துக்குடி: வீட்டில் வீணாகிக் கிடந்த பழைய ஹெட்செட்டுகள், வேலை செய்யாத எலக்ட்ரானிக் போர்டுகள் ஆகியவற்றை சேகரித்து, ப்ளூடூத் ஹெட்செட்டை வடிவமைத்த ஜேன் பினிகாஸின் படைப்பார்வம் வியக்கவைக்கிறது.

பழைய பொருட்களில் ப்ளுடூத் ஹெட்செட் வடிவமைத்து அசத்திய மாணவன்!

தொழில்நுட்பம், ஆச்சரியங்களின் புதையல், விரல் நுனியில் அனைத்தையும் சாத்தியப்படுத்த வல்லது. அத்தகைய, தொழில்நுட்பம் நமக்களித்த வரப்பிரசாதம்தான், ஒலிக் கடத்திகள். மின்காந்த அலைகளைக் கொண்டு கம்பியில்லா முறையில் செல்போனுக்கும்-ஹெட்செட்டுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தி, சப்தங்களை நம் செவியில் பாயச்செய்கிறது. 30மீ சுற்றளவுவரை அலைபேசியை, கம்பியில்லா இணைப்பில் பயன்படுத்துவது, தொழில்நுட்ப வளர்ச்சியின் மைல்கல்.

இது போன்ற அற்புதமான தொழில்நுட்பத்தை வடிவமைத்துத் தருபவர்கள் என்னென்ன பட்டங்கள் வாங்கியிருப்பார்கள், எத்தனை முறை முயன்றிருப்பார்கள்? என்று என்றைக்காவது சிந்தித்துப் பார்த்தால், வியப்புதான் மேலிடும். நிறைய கண்டுபிடிப்புகள், படிப்பு மட்டுமில்லாது அறிவியல் மீதும், கண்டுபிடிப்புகள் மீதும் கொண்ட காதலால்தான் சாத்தியமாகிறது. ஆம், தொழில்நுட்பத்தை நேசிப்பவர்களால்தான், அதனை ஆர்வத்துடன் உருவாக்கவும் முடியும். அந்தத் தீரா ஆர்வம், ஜேன் பினிகாஸை தனது 16 வயதிலேயே கண்டுபிடிப்பாளராக மாற்றியுள்ளது.

ஜேன் பினிகாஸ்
ஜேன் பினிகாஸ்

தூத்துக்குடி மாவட்டம், குறிஞ்சி நகரை சேர்ந்த சிவில் பொறியாளர் பென்னி கிறிஸ்டோபர், பள்ளி ஆசிரியை ஜெயஹரினாவின் அன்பு மகன் ஜேன் பினிகாஸ், தற்போது பத்தாம் வகுப்பு பயின்றுவருகிறார். இந்த சின்ன வயதில், சொந்த முயற்சியில் ப்ளூடூத் ஹெட்செட் ஒன்றினை, தானே வடிவமைத்து பயன்படுத்திவருகிறார். இது எப்படி சாத்தியமானது? அவரிடமே கேட்போம்.

ஜேன் பினிகாஸ், ”நான் எட்டாவது படிக்கும்போது என்னுள் ரோபோடிக்ஸ் துறையில் ஆர்வம் அதிகரித்தது. பள்ளிதான் என் கனவுகளின் வாசல்படி. அங்கிருந்துதான் என் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி, பரிசுகளை வெல்லத் தொடங்கினேன். இப்படி, சுமுகமாக போய்க் கொண்டிருந்தபோதுதான் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதை நான் எதிர்பார்க்கவில்லை.

ஜேன் பினிகாஸ்
ஜேன் பினிகாஸ்

இந்த சமயத்தில், நான் வாங்க நினைத்த ப்ளூடூத் ஹெட்செட் கேஜெட்டையும் வாங்கமுடியாமல் போனது. ஊரடங்கு முடிந்து வாங்கலாம் என்று நினைத்தேன். அதையும் நீட்டித்துவிட்டார்கள். எனக்காக நானே உருவாக்கிவிட வேண்டியதுதான், வேறு வழியில்லை என்று முடிவுசெய்தேன். வீட்டில் வீணாகிக் கிடந்த பழைய ஹெட்செட்டுகள், வேலை செய்யாத எலக்ட்ரானிக் போர்டுகள் ஆகியவற்றை சேகரித்தேன். செல்போன் பேட்டரி, லைட் என அனைத்தையும் பொருத்தி, புளூடூத் ஹெட்செட்டை வடிவமைத்து முடித்தேன்” என பெருமிதமாக சொல்லிமுடித்தார்.

ப்ளுடூத் ஹெட்செட்
ப்ளூடூத் ஹெட்செட்

ப்ளூடூத் ஹெட்செட்டின் சிறப்பம்சங்கள்

”மற்ற ப்ளூடுத் ஹெட்செட் போல வெறும் பாட்டு கேட்கும் சாதனமாக இல்லாமல், அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக டார்ச் பொருத்தியிருக்கிறேன். ஆக்ஸ் கேபிள் என்ற இணைப்பு வயர் மூலம் கனெக்ட் செய்து, பாட்டு கேட்க முடியும். ஹெட்செட் முழுவதிலும் அலங்கார விளக்குகள் ஒளிரும் வகையில், கவர்ச்சியாக வடிவமைத்துள்ளேன்”

யார் இந்த ஜேன் பினிகாஸ்?

ஜேன் பினிகாஸின் படைப்புகள்

இது தனது முதல் கண்டுபிடிப்பு அல்ல, மூன்றாவது என விளக்கும் ஜேன், ”மனிதன் கால் பதிக்காத குகைகளுக்குள், மனிதன் செல்ல ஏற்ற சூழல் உள்ளதா? வெப்பநிலை எவ்வளவு உள்ளது? இடர்கள் எங்கெங்கு உள்ளது என்பது குறித்து ஆராய்வதற்காக ரோபோ ஒன்றை வடிவமைத்தேன். அதுபோல, காட்டில் சிங்கங்களின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்கும்கூட ரோபோவை உருவாக்கியிருந்தேன். இதை அறிவியல் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி பாராட்டைப் பெற்றேன். அடுத்த முயற்சியாக, மனிதனின் கட்டளைகளை ஏற்று, அதை செய்யும் ரோபோவை வடிவமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறேன். ஊரடங்கு காலம் முடிவுற்றதும், அந்தப் பணிகளை தொடர்ந்து செய்து வெற்றி பெறுவேன்”என்றார்.

இதையும் படிங்க: செருப்பு தைக்காமல் நாள்களை கடத்தலாம்...பசி இல்லாமல் வாழ்வை நகர்த்த முடியாது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.