ETV Bharat / state

குலசை தசரா திருவிழா, வழிப்பாட்டு வழிமுறைகள் அறிவுறுத்தல்! - dasara festival

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடங்கியதையடுத்து, வழிப்பாட்டு வழிமுறைகள் குறித்து கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

குலசை தசரா திருவிழா தொடக்கம்
குலசை தசரா திருவிழா தொடக்கம்
author img

By

Published : Oct 18, 2020, 6:25 PM IST

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றம் பக்தர்களின்றி நேற்று (அக். 17) நடைபெற்றது.

இதனால் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் இரண்டு கூடுதல் கண்காணிப்பாளர்கள், நான்கு துணை கண்காணிப்பாளர்கள் உள்பட 500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் தினமும் 250 காவலர்கள் வீதம் இரண்டு பிரிவாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். கரோனா தாக்கத்தை கட்டுபடுத்தும் பொருட்டு முதல் நாள், பத்தாம் நாள் திருவிழாவிற்கு பொதுமக்கள், பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலசை தசரா திருவிழா தொடக்கம்

திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று (அக்.18) முன்பதிவு செய்த பக்தர்கள் ஒரு நாளைக்கு எட்டாயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள். மாவட்டத்தில் 1300 தசரா குழுக்கள் பதிவு செய்யபபட்டுள்ளது, இன்று முதல் முன்பதிவு செய்த குழுக்கள், ஒரு குழுவிற்கு இரண்டு பேர் மட்டும் கோயில் அலுவலகத்தில் வந்து காப்பு கயிறை பெற்றுக் கொண்டு, தங்கள் ஊரிலேயே பக்தர்கள் காப்பு, வேடம் அணிந்து திருவிழா இறுதி நாளன்று பக்தர்கள், தங்கள் ஊரில் தங்கள் பகுதிகளிலேயே காப்பை கழட்டிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க...15 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.