ETV Bharat / state

தூத்துக்குடி துரைமுத்து: ஆதிமுதல் அந்தம்வரை! - உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன்

அடங்கா ரவுடி துரைமுத்துவின் ஆதிமுதல் அந்தம் வரையிலான சிறப்புப் பார்வை.

தூத்துக்குடி துரைமுத்து அடங்கா ரவுடியான விபரம் ஆதி முதல் அந்தம் வரை...!

author img

By

Published : Aug 20, 2020, 11:26 AM IST

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே தலைமறைவு குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற இடத்தில் காவலர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம், காவல் துறை வட்டாரத்தை கதிகலங்கச் செய்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் நாட்டு வெடிகுண்டு தலையில் பட்டதில் தலை சிதறி காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்தார். குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த குற்றவாளி துரைமுத்துவும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துபோனார்.

உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன்
உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன்

இந்தச் சம்பவத்தில் துரைமுத்துவின் சகோதரன் சாமிநாதன் (24), கூட்டாளிகளான மணக்கரையைச் சேர்ந்த சிவராமலிங்கம் (29), சுடலைகண்ணன் (30) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

காவல் துறை வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய துரைமுத்து யார் என்பது குறித்து காணலாம்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவுக்குள்பட்ட மேலமங்கலகுறிச்சி ஊரைச் சேர்ந்தவர் பிச்சையா பாண்டியன். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இரண்டு மனைவிகளுக்கும் சேர்த்து மொத்தம் ஐந்து ஆண், மூன்று பெண் பிள்ளைகள் இவருக்கு உண்டு. இதில் மூத்த மனைவிக்கு பிறந்தவன்தான் துரைமுத்து (27), தற்போதுவரை திருமணம் ஆகவில்லை. சிறுவயது முதலே மூர்க்கத்தனமான குணத்தால் துரைமுத்து சரிவரப் பள்ளிக்குச் செல்லவில்லை. தொடர்ந்து கூடா நட்புடன் பழக்கம் ஏற்பட்டு மது, சூது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கத்துக்கு துரைமுத்து அடிமையானார்.

ஏரல் பகுதிக்குள்பட்ட சுற்றுப்புறங்களில் சிறு, சிறு திருட்டுகள் செய்துவந்த துரைமுத்து 2018ஆம் ஆண்டு உடன் பழகிய நண்பர்கள் இருவரை தீர்த்துக்கட்டிய சம்பவத்தில் காவல் துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். துரைமுத்துவுடன் சேர்ந்து திருட்டுச் செயல்களில் ஈடுபட்டுவந்தவர்கள் ஏரல் பகுதியைச் சேர்ந்த வினோத், ராமச்சந்திரன். இவர்கள் மூவரும் நண்பர்கள். திருட்டுத் தொழிலில் ஏற்பட்ட பொறாமை காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு ஏரல் ஆற்றங்கரையோரம் மூவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த துரைமுத்து நண்பர்கள் என்றும் பாராமல் வினோத்தையும், ராமச்சந்திரனையும் வெட்டிக் கொலைசெய்தார். இந்த இரட்டைக் கொலை சம்பவம் ஏரல் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரட்டைக் கொலை சம்பவத்தில் மரணம் அடைந்த நபர்கள் மாற்று சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த விவகாரம் அப்போதைய காலகட்டத்தில் பெரும் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் துரைமுத்து காவல் துறை வசம் சிக்காமல் தலைமறைவானார். இது அவர் மேலும் அடுத்தடுத்து தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடக் காரணமாக அமைந்தது.

துரைமுத்துவின் மீது ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு எண் 387, 294 b, 341, 506 ii உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் திருட்டு வழக்கும், ஏரல் காவல் நிலையத்தில் இரட்டைக் கொலை தொடர்பாக 302 பிரிவின்கீழ் கொலை வழக்கும் உள்ளது. அதுமட்டுமின்றி மற்றொரு வழக்காக 294 b, 387, 506 ii பிரிவின்கீழ் திருட்டு வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது தவிர நெல்லை மாவட்டம் பேட்டை காவல் நிலையத்தில் துரைமுத்துவின் மீது 302வது பிரிவின்கீழ் மேலும் ஒரு கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் 307வது பிரிவின்கீழ் கொலை முயற்சி வழக்கும், ஏரல் காவல் நிலையத்தில் சாதி மோதலைத் தூண்டும்வகையில் செயல்பட்டதற்காக 107, 110 உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் மூன்று வழக்குகளும் துரைமுத்து மீது பதிவுசெய்யப்பட்டு விசாரணையில் உள்ளது.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் துரைமுத்து மீது மற்றுமொரு திருட்டு வழக்கு 387வது பிரிவின்கீழ் பதிவுசெய்யப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இப்படி துரைமுத்துவின் மீது சுமார் 10 வழக்குகள் நிலுவையிலிருந்து வந்த நிலையில், அவரைப் பிடிப்பதற்கு, ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகப்பெருமாள் தலைமையில் தனிப்படை அமைத்து தலைமறைவான துரைமுத்துவை தீவிரமாகத் தேடிவந்தனர்.

அப்போது தொழில் விரோதத்தில் பழிக்குப்பழியாக கொலைசெய்ய திட்டம் தீட்டுவதற்காக துரைமுத்து முறப்பநாடு அருகே மணக்கரை பகுதியில் முகாமிட்டு இருப்பதாகத் தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து துரைமுத்துவின் செல்போன் எண்ணை கொண்டு அவர் இருக்கும் இடத்தை உறுதி செய்துகொண்ட தனிப்படை காவல் துறையினர் அவரைச் சுற்றி வளைத்து பிடிப்பதற்காக அங்கு சென்றனர். அப்போது காவல் துறையினரைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற துரைமுத்துவையும் அவருடைய கூட்டாளிகளையும் தனிப்படை காவல் துறையினரும் மடக்கிப் பிடித்தனர்.

இருப்பினும் காவல் துறையின் பிடியிலிருந்து தப்பி ஓடிய துரைமுத்துவை காவலர் சுப்பிரமணியன் விரட்டிச் சென்று பிடிக்க முயன்றார். அப்பொழுது துரைமுத்து தான் கையில் எடுத்துச் சென்ற ரோஸ் கலர் கைப்பையில் இருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை காவலர் சுப்பிரமணியனை நோக்கி வீசி எறிந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் வெடிகுண்டு சுப்பிரமணியனின் தலையில் பட்டு வெடித்துத் சிதறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குண்டு வெடிப்பு நடைபெற்ற இடம்
குண்டு வெடிப்பு நடைபெற்ற இடம்

குண்டுவெடிப்பில் படுகாயங்களுடன் தூக்கிவீசப்பட்ட துரைமுத்துவும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் உயிரிழந்த இடத்தை நேரில் பார்வையிட்டு தடயங்களைச் சேகரிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து காவலர் சுப்பிரமணியனின் உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூறாய்வுக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதற்கிடையே குற்றவாளி துரைமுத்துவின் உடலும் உடற்கூறாய்விற்காக நெல்லை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டது. தலைமறைவு குற்றவாளி துரைமுத்து மணக்கரை பகுதியில் பதுங்கி இருந்தது ஏன் என்பது குறித்து காவல் துறையினர் விசாரிக்கையில், துரைமுத்துவின் சகோதரிக்கு மணக்கரையைச் சேர்ந்தவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

எனவே தங்கைக்கு நிச்சயித்த மாப்பிள்ளையுடன் உறவு பாராட்டுவதற்காக மணக்கரையில் துரைமுத்து பதுங்கி இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது. குண்டுவெடிப்பில் துரை முத்துவின் கூட்டாளிகளாக கைதுசெய்யப்பட்ட மூன்று பேரில் சாமிநாதன் என்பவர் துரைமுத்துவின் உடன்பிறந்த தம்பி ஆவார். அதாவது துரைமுத்துவின் தந்தை பிச்சையாபாண்டியனின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் துரைமுத்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டது எப்படி? அதற்கு தேவையான கரி மருந்து அவருக்கு எங்கிருந்து கிடைத்தது? யார் அவருக்கு அதனை சப்ளை செய்தது? யார் யாருடன் அவர் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க...உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடலுக்கு டிஜிபி தலைமையில் காவலர்கள் மரியாதை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.