ETV Bharat / state

ஓட்டப்பிடாரத்தில் திண்ணை பிரசாரத்தைத் தொடங்கினார் ஸ்டாலின்! - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி: திமுக தலைவர் ஸ்டாலின் ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திண்ணை பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

தின்னை பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் !
author img

By

Published : May 14, 2019, 5:31 PM IST

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரப் பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். ஓட்டபிடாரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட ராமச்சந்திரபுரம், ஜக்கம்மாள்புரம், காமராஜர் நகர், கூட்டாம்புளி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்த அவர், திடீரென திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை!

அப்போது பொதுமக்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம், குடிநீர் வசதி, சாலை வசதி, பேருந்து வசதி, உள்ளிட்டவை எங்களுக்கு 40 ஆண்டுகளாக சரிவர கிடைக்காமல் இருப்பதாகவும், திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர், மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் பிறந்தநாளையொட்டி, அங்கு அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Intro:திமுக தலைவர் ஸ்டாலின் ஒட்டபிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திடீர் தின்னை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

Body:தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.

தொடர்ந்து அவர் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராமச்சந்திரபுரம் ஜக்கம்மாள் புரம் காமராஜர் நகர் கூட்டாம்புளி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து திடீர் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார் அப்போது பொதுமக்கள் திமுக தலைவர் ஸ்டாலின் இடம் குடிநீர் வசதி சாலை வசதி பேருந்து வசதி உள்ளிட்டவை எங்களுக்கு 40 ஆண்டுகளாக சரிவர கிடைக்காமல் உள்ளது திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதை கேட்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என கூறினார். பிரச்சாரத்தின் இடையே ராமச்சந்திரபுரம் கிராமத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அருகே பொதுமக்கள் பதநீர் அருந்த கொடுத்தனர். அதை கணிவுடன் பெற்றுக் கொண்ட அவர் பதநீரை ருசித்து சாப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து பிரச்சாரத்தை முடித்துக் கொண்ட அவர் தங்கியுள்ள தனியார் ஓட்டலுக்கு வந்தார். திமுக பிரமுகர் அன்பில் தர்மலிங்கம் பிறந்தநாளையொட்டி அங்கு அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.