தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மயில்வாகனம் என்பவருக்கு சொந்தமான திருநெல்வேலி லாலா மிட்டாய் கடை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவருகின்றது. இந்த நிறுவனம் தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் கிளைகளை ஏற்படுத்தி தனது வியாபாரத்தை மேற்கொண்டுவருகிறது. இந்தக் கிளைகள் மூலமாக நாள்தோறும் பல லட்ச ரூபாய் வியாபரம் நடக்கிறது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் உரிமையாளர் மயில்வாகனன் முறையாக வருமானவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்துவருவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து வரி முறைகேடு சம்பந்தமாக திருநெல்வேலி லாலா கடை உரிமையாளரின் வீடு மற்றும் கடைகளில் வருமான வரித்துறை அலுவலர்கள் இன்று சோதனை நடத்தினர்.
பல மணிநேரம் நடைபெற்ற இச்சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. தற்போது, வருமான வரித்துறை அலுவலர்கள் மயில்வாகனனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கிஸான் கிரெடிட் கார்டு மூலம் பிணை இல்லாமல் கடன் பெறலாம் - மாவட்ட ஆட்சியர் பேட்டி