ETV Bharat / state

கரோனா தொற்று பகுதியில் மக்கள் போராட்ட முயற்சி - தூத்துக்குடி கரோனா விவரம்

தூத்துக்குடி: கோவில்பட்டியில் கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாட்டு பகுதியில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்
துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்
author img

By

Published : May 24, 2020, 9:55 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (50). நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த ஐந்து நாளுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அதைத் தொடர்ந்து அவர் இருக்கும் பகுதியான ஸ்டாலின் காலனி பகுதியைச் சுகாதாரத் துறையினர், வருவாய் துறையினர், காவல் துறையினர் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து தடுப்புகளை அமைத்துள்ளனர். அங்கு வாழும் 70 குடும்பங்களைச் சேர்ந்த 249 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பாண்டியம்மாள் உறவினர்கள் மூன்று பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு அவர்களும் அதே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுகின்றனர்.

thoothukudi sanitizer workers protest for corona relief materials
தடுப்புகளை தாண்டி போராட்டத்தில் ஈடுபட முயற்சித்த பொதுமக்கள்

இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அத்தியாவசிய பொருள்கள் எதுவும் இல்லாமலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக கூறிய அம்மக்கள், தாங்கள் வாடகை வீட்டில் இருப்பதாலும் தங்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அரசு தங்களுக்கு இலவச நிவாரணப் பொருள்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் வாடகை வீட்டில் உள்ளவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களிடம் பேசி வாடகை நெருக்கடி தராமல் இருக்க்கோரி தடுப்புகளை தாண்டி இன்று வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.