தூத்துக்குடி: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இது ’யாஸ்’ புயலாக நாளை (மே.26) கரையைக் கடக்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக தமிழ்நாட்டில் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதையொட்டி தூத்துக்குடி துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் துறைமுகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ?
ஆனால் சற்று பலமாக காற்று வீசும் என்பதே 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டுக்கு அர்த்தமாகும். இதையடுத்து, மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.