தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுபாஷ் நகரைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (எ) எலி (22). இவர் அக்டோபர் 5ஆம் தேதி அதேப்பகுதியை சேர்ந்த நபரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதே போன்று, மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியைச் சேர்ந்த அய்யனார்(30), சூர்யா(20) கயத்தாறு பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவத்தில் கயத்தாறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அய்யனார், சூர்யா ஆகிய இருவரையும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அய்யனார், சூர்யா, சங்கரேஸ்வரன் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதி கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் ஒப்புதலின் பேரில் 3 பேரையும் காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் ஒரே நாளில் 3 பேர் கைது - குண்டர் சட்டத்தின் கீழ் கைது
தூத்துக்குடி: ஒரே நாளில் மூன்று பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.