ETV Bharat / state

தூத்துக்குடியில் பனிமயமாதா பேராலய 10ஆவது நாள் திருவிழா - மாதா

தூத்துக்குடி: பனிமயமாதா பேராலய திருவிழாவின் 10ஆவது நாள் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பனிமயமாதா பேராலயம்
author img

By

Published : Aug 5, 2019, 11:55 AM IST

Updated : Aug 5, 2019, 12:56 PM IST

தூத்துக்குடியில் உலக பிரசித்திப் பெற்ற பனிமயமாதா ஆலயத்தின் 437வது ஆண்டு திருவிழா, ஜூலை மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில் கிறிஸ்துவ மக்கள் மட்டுமின்றி இந்துக்கள், இஸ்லாமிய பெருமக்களும் திரளாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிப்பது வழக்கம்.

இத்திருவிழாவின் 9ஆவது நாளின் முக்கிய நிகழ்ச்சியான சொரூப சப்பர பவனி, ஆலயவளாகத்திற்குள் சுற்றிவரும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. திருவிழாவின் 10ஆவது நாளான இன்று, சிறப்புக் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 7 மணியளவில் பனிமயமாதா சொரூபம் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு தூத்துக்குடி நகரில் உள்ள வீதிகளில் உலா வரும் சப்பரபவனி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தூத்துக்குடியில் பனிமயமாதா பேரால திருவிழா

பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பலர் வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்துள்ளனர்.

Intro:தூத்துக்குடி பனிமயமாதா பேராலய 9 வது  திருவிழா கோலாகலம்: சொரூப சப்பர பவனி நடைபெற்றது- பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்புBody:தூத்துக்குடி

தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் 437 ஆண்டு கால பழமை வாய்ந்த தூத்துக்குடிதூய பனிமய மாதா பேராலயம் உலக பிரசித்திபெற்றதாகும் இந்த பனிமய மாதா பேராலயத்தின்437வது ஆண்டு திருவிழா கடந்த 26 ம் தேதிகொடியேற்றத்துடன் துவங்கியது இந்ததிருவிழாவில் கிறிஸ்துவ மக்கள் மட்டுமின்றிஇந்துக்கள் இஸ்லாமிய பெருமக்களும் திரளாககலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பிப்பது மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவிளங்குகிறது அனைத்து மக்களும் வழிபடும்  இந்த ஆலயத்தில் தினசரி காலை மாலைநேரங்களில் சிறப்பு திருப்பலிகள் ஆராதனைகள்நடைபெற்றன.  இந்தத்திருப்பலியில் ஒவ்வொருநாளும் மீனவர்கள்,  உப்பளத் தொழிலாளர்கள், வியாபாரிகள், நோயாளிகள், உலக நன்மைகள்என ஒவ்வொன்றிற்காகவும் பொன் மகுடம்அணிவிக்கப்பட்டிருந்த பனிமய அன்னையிடம்சிறப்பு பிரார்த்தனைகள்  செய்யப்பட்டன. தூத்துக்குடி உலக பிரசித்தி பெற்ற  437ஆண்டுகள் பழமை வாய்ந்த பனிமய மாதாபேராலய 9 வது  திருவிழாவின் முக்கியநிகழ்ச்சியான  சொரூப சப்பர பவனி ஆலயவளாகத்திற்குள் சுற்றிவரும் நிகழ்ச்சி  இன்றுமாலை நடைபெற்றது.  இந்த திருவிழாவின் 10 வது நாளான நாளை காலை இரண்டு முறைசிறப்பு கூட்டு திருப்பலி நடைபெறும். நாளைமாலை பனிமயமாதா சொரூபம்அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில்  வைக்கப்பட்டு  தூத்துக்குடி நகரில் உள்ள வீதிகளில் உலா வரும்சப்பரபவனி நிகழ்ச்சி நடைபெறும்.பனிமயமாதாஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடிநகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடிமாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறைவிடப்பட்டுள்ளது.இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பலர் வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்துள்ளனர்.

 1. இருதயராஜ் மஸ்கர்ணா 2.சிவகாமி 3.சக்திவேல்   Conclusion:
Last Updated : Aug 5, 2019, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.