ETV Bharat / state

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார் எதிரொலி: மருத்துவ மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு! - thuthukudi medical college student certificate verification

தூத்துக்குடி: நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

Thoothukudi medical college student certificate verification
author img

By

Published : Sep 23, 2019, 7:34 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்ட புகாரில் சிக்கியது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணியை மீண்டும் நடத்துமாறு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று நடைபெற்றது. அதில் மருத்தவ படிப்பில் சேர்ந்த 150 மாணவ,மாணவிகளும் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி மருத்துவக்கல்லூரியில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது

மருத்துவக்கல்லூரி பொறுப்பு முதல்வர் பாவலன், துணை முதல்வர் கலைவாணி ஆகியோர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவினர் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் நீட் தேர்வு நுழைவு சீட்டு, மருத்துவ கல்லூரி இயக்ககத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனுமதி சீட்டு, கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்களால் அளிக்கப்பட்ட சுயசான்றிதழ் ஆகியவை சரி பார்க்கப்பட்டன.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி பொறுப்பு முதல்வர் பாவலன் செய்தியாளரிடம் பேசுகையில், "மருத்துவக்கல்லூரி இயக்ககத்தின் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று முடிந்துள்ளது.

இதற்கு அனைத்து மாணவர்களுக்கும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். இதில் எந்த மாணவரும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது"என்றார்

Intro:நீட் தேர்வில் ஆள்மாறாட்ட புகார் எதிரொலி:
தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு - 7 பேர் கொண்ட குழுவினர் தலைமையில் நடைபெற்றதுBody:தூத்துக்குடி

தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாட்ட புகாரில் சிக்கியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணியை மீண்டும் நடத்துமாறு மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி இன்று நடைபெற்றது. மருத்துவக்கல்லூரி பொறுப்பு முதல்வர் பாவலன், துணை முதல்வர் கலைவாணி ஆகியோர் தலைமையில் மருத்துவ துறை தலைவர்கள் ஜெயராணி, அனிதா, சண்முகபிரியா உள்பட 7 பேர் கொண்ட குழுவினர் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் நீட் தேர்வு நுழைவு சீட்டு, போட்டோ மற்றும் மருத்துவ கல்லூரி இயக்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனுமதிச்சீட்டு, போட்டோ, கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்களால் அளிக்கப்பட்ட சுயசான்றிதழ், போட்டோ ஆகியவை ஆகியவற்றை பரிசீலனை குழுவினர் சரி பார்த்தனர்.

இந்த கலந்தாய்வில் மருத்துவ படிப்பில் சேர்ந்த 150 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். இதில் 69 ஆண்களும் 81 மாணவிகளும் உள்ளடங்குவர். இதில் 21 மாணவ- மாணவியர் அகில இந்திய இட ஒதுக்கீட்டின்படியும், 129 பேர் மாநில அரசு இட ஒதுக்கீட்டின் பேரிலும் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியை தேர்ந்தெடுத்து மருத்துவப் படிப்பில் சேர்ந்தவராவர்.

சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து மருத்துவக்கல்லூரி பொறுப்பு முதல்வர் பாவலன் செய்தியாளரிடம் தெரிவிக்கையில், மருத்துவக்கல்லூரி இயக்கம் அறிவுறுத்தலின் பெயரில் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் சான்றிதழ் சரிபார்ப்பு பணி அனைத்து மாணவர்களுக்கும் நிறைவடைந்துள்ளது. கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டதில் எந்த மாணவரும் ஆள்மாறாட்ட புகாரில் மருத்துவக்கல்லூரியில் சேரவில்லை என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.