ETV Bharat / state

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணை: 36ஆவது கட்ட அமர்வுடன் நிறைவுபெற வாய்ப்பு - தூத்துக்குடி செய்திகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான 36ஆவது கட்ட அமர்வுடன் ஒருநபர் ஆணைய விசாரணை நிறைவுபெற வாய்ப்புள்ளதாக ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை
author img

By

Published : Jan 30, 2022, 8:09 AM IST

தூத்துக்குடி: 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச்சூடு, தடியடி ஆகியவற்றில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆணையத்தின் 35ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையிலுள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அலுவலர் அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி தொடங்கியது.

6 பேருக்கு சம்மன்

இதில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, பொறுப்பிலிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன், திருநெல்வேலி சரக டிஐஜி கபில் குமார் சரத்கார், தென்மண்டல காவல் துறை தலைவர் சைலேஷ் குமார் யாதவ், முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட ஆறு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணை

இந்நிலையில், ஒருநபர் ஆணையத்தின் 35ஆவது அமர்வு விசாரணை நேற்றுடன் (ஜன. 29) நிறைவு பெற்றதை தொடர்ந்து ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

36ஆவது கட்ட அமர்வில் கிரிஜா வைத்தியநாதன்

அப்போது அவர் கூறுகையில், “35ஆவது அமர்வு விசாரணையில் ஆஜராவதற்காக ஆறு பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் ஐந்து பேர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தவிர்க்க முடியாத காரணத்தால் ஆணையத்தின் அடுத்தக்கட்ட விசாரணைக்கு ஆஜராவதாக தகவல் தெரிவித்துள்ளார். இதை ஏற்று, முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஒருநபர் ஆணையத்தின் 36ஆவது கட்ட விசாரணைக்கு அழைக்கப்படுவார்.

ஆணையத்தின் அடுத்தக்கட்ட விசாரணை பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விசாரணைக்கு, முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய தமிழ்நாடு காவல் துறை தலைவர், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைவர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்படும். ஒருநபர் ஆணையத்தின் 36ஆவது அமர்வுடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை முடிவுக்கு வரும் என நம்புகிறோம்.

விசாரணை நிறைவுற்றாலும், ஆணையத்தின் முன்பு பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களை தொகுக்க சிறிது கால அவகாசம் தேவைப்படலாம். ஒருநபர் ஆணையத்தில் இதுவரை நடந்த 35 கட்ட விசாரணையில் ஆயிரத்து 421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, ஆயிரத்து 42 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து 516 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க: முரசொலி பத்திரிகை ஆளுநரை குறித்து அவதூறு பரப்புகிறது - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.