ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் வாடிக்கையாளர்கள் அவ்வங்கி ஏ.டி.எம்.மில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் கணக்கு வைத்திருக்கும் நபரின் செல்போனுக்கு ஒருமுறை மட்டும் பயன்படும் ரகசிய கடவு எண் அனுப்பி வைக்கப்படும். அதனை உள்ளீடு செய்த பின்பே பணத்தை எடுக்கமுடியும் என்ற புதிய நடைமுறையை ஸ்டேட் பாங்க் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறை வருகிற ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என ஸ்டேட் பாங்க் அறிவித்துள்ளது.
ஏ.டி.எம். மையங்களிலிருந்து நூதன முறையில் வாடிக்கையாளர் பணம் திருடப்படுவதைத் தடுப்பதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்படுவதாக ஸ்டேட் பாங்க் அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய நடைமுறைக்கு வாடிக்கையாளர்கள் தரப்பில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளர்களிடம் கேட்டபொழுது, "ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள இந்தப் புதிய நடைமுறை வரவேற்கத்தக்கது என்றும், வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக இதனை வங்கி கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவித்துள்ள இந்த புதிய நடைமுறை வயாதன முதியோர்கள், எழுத்தபடிக்கத் தெரியாத பாமர மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இந்த நடைமுறையை வங்கி எளிமையாக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என வேறு சிலர் புகார் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க : தேர்தல் விவகாரம்: செல்ஃபோன் டவர் மீது ஏறி இளைஞர் போராட்டம்!