தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் சாரு ஸ் இன்று (டிச.6) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 80 சதவிகிதம் முடிவு பெற்று விட்டது. மார்ச் 23ஆம் தேதிக்குள் முழுமையாக பணிகள் முடிவு பெற்று விடும்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழை வெள்ளத்தால் சென்ற ஆண்டு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு, அரசு ரூ.45 கோடி பணம் ஒதுக்கியுள்ளது. வடிகால் பணிகள் வேலை நடைபெற்று வருகிறது. இப்பணி 2 மாதத்திற்குள் முடிவு பெரும். பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ரூ.120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ரூ.200 கோடி அரசிடம் இருந்து வரும் பட்சத்தில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.
ஸ்மார்ட் சிட்டி மூலம் பாதிக்கு மேல் தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்டறிந்து வடிகால் வசதி அமைத்து விட்டோம். தாழ்வான பகுதியில் மழை நீரை வாகனம் மூலம் எடுத்து வருகிறோம். மக்கள் சமூக வலைதளத்தில் அவர்கள் பகுதியில் மழைநீர் உள்ளதாக பதிவு செய்து வருகிறார்கள்; அதனடிப்படையில் நீரை எடுத்து வருகிறோம்.
பாதாள சாக்கடை திட்டம் குறித்த கேள்விக்கு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டமானது 2 விதமான செயல்படுத்தப்படுகிறது. அதில் முதலாவதாக, 2010ஆம் ஆண்டே இந்த திட்டம் தொடங்கப்பட்டு நிறைவு பெற்றுள்ளது. மாநகராட்சி பகுதியில் உள்ள 10 மண்டலத்தில் 6 மண்டலம் முடிவு பெற்று சுத்திகரிப்பு நிலைத்தில் 7 ml நீர் வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் 4 மண்டலத்தில் செக் செய்து 2 மாதத்தில் முழுமையடையும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.120 கோடி மதிப்பில் வேலை நடைபெற்று வரும் பட்சத்தில் ஜூன் மாதத்தில் முடிவு பெரும். குடிநீர் இணைப்பில் முறைகேடு நடைபெறுவதாக குறித்த கேள்விக்கு மக்கள் குடிநீர் இணைப்புக்கு பணம் அளிக்க வேண்டாம். மாநகராட்சி பகுதியில் அந்தந்த பகுதிகளில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் இணைப்புக்கு லஞ்சம் கேட்கும் பட்சத்தில் Whats App எண் 7397731065 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் "என கூறினார்.
இதையும் படிங்க: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேத்கர் நினைவு நாள் இன்று