ETV Bharat / state

'சீனாவுக்கு சுற்றுலா சென்றவர்களை கண்காணித்து வருகிறோம்' - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி: சீனாவுக்கு சுற்றுலா சென்று தூத்துக்குடி திரும்பியவர்களை சுகாதாரத்துறை அலுவலர்கள் கண்காணித்து வருவதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

author img

By

Published : Feb 4, 2020, 7:32 AM IST

Updated : Mar 17, 2020, 5:42 PM IST

thoothukudi-collector-about-corona-virus-prevention-methods

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் கட்டமாக ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல் நாளில் 41 பேரும், 2ஆம் நாளில் 121 பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகள் இல்லாமல் வேறு ரேசன் கடைகளில் பொருள்கள் வாங்கினர் எனவும், ரேஷன் கடைகளில் தினம்தோறும் பொருள் இருப்பு சரிபார்க்கப்பட்டு, தேவையான இடங்களுக்கு கூடுதல் பொருள்கள் அனுப்பி வைக்கப்படுவதாக கூறினார்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தொடர்ந்து பேசிய ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், சீனாவுக்கு சுற்றுலா சென்று தூத்துக்குடி திரும்பிய நான்கு பேரை சுகாதாரத்துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணிப்பு வருவதாக குறிப்பிட்டார்.

மேலும் தீவிர சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுகி தகுந்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், வணிக ரீதியாக சீனாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு வருபவர்களும் தீவிரமான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றார்.

இதையும் படிங்க: சிறுத்தை நடமாட்டத்தால் கொடிவேரி மக்கள் அச்சம்!

Last Updated : Mar 17, 2020, 5:42 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.