ETV Bharat / state

ஸ்டாலின் தங்கும் ரிசார்ட்டில் சோதனை! - dmk leader mk.stalin

தூத்துக்குடி: திமுக தலைவர் ஸ்டாலின் தங்கவிருக்கும் சத்யா ரிசார்ட்டில் பறக்கும்படை அலுவலர்கள் சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி
author img

By

Published : May 14, 2019, 2:36 PM IST

ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து இரண்டாம் கட்டமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை இத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். வல்லநாடு, தெய்வச்செயல்புரம், அக்காநாயக்கன்பட்டி பரிவல்லிக்கோட்டை ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி சத்யா ரிசார்ட்

இந்நிலையில், அவர் வழக்கமாக தங்கும் தூத்துக்குடி - நெல்லை நெடுஞ்சாலையில் உள்ள சத்யா ரிசார்ட்டில் 10-க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த திமுகவினரின் கார்களிலும் பறக்கும்படை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். ஒரு மணி நேரம் வரை இச்சோதனை நீடித்தது.

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து,  இரண்டாம் கட்டமாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் இன்று மாலை இத் தொகுதிக்கு உட்பட்ட வல்லநாடு, தெய்வச்செயல்புரம், அக்காநாயக்கன்பட்டி  பரிவல்லிக்கோட்டை ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில், இன்று காலை அவர் வழக்கமாக தங்கும் தூத்துக்குடி - நெல்லை நெடுஞ்சாலையில் உள்ள சத்யா ரிசார்ட்ஸ் என்னும் தனியார் ஹோட்டலில் 10-க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதே ஹோட்டலில்தான் இத்தொகுதிப் பொறுப்பாளர் கே.என்.நேருவும் தங்கி உள்ளார். ஹோட்டலுக்குள் நிறுத்தப்பட்டிருந்த தி.மு.கவினரின் கார்களிலும் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

பணப்பட்டுவாடா புகாரின் பேரில் சோதனையிட வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு மணி நேரம் வரை இச்சோதனை நீடித்தது.

Visual FTP
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.