முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா நேற்று (பிப்.17) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
பின்னர் அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் மாசி திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இத்திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாசி திருவிழா நிகழ்ச்சிகளை காண, சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வர வேண்டும்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். கோவிலுக்குள் தேவையான இடங்களில் பக்தர்கள் கை கழுவுவதற்கான வசதியும், சானிடைசர் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மூதாட்டியின் வேதனை குற்றச்சாட்டு: ராகுலுக்குத் தவறாக மொழிபெயர்த்த நாராயணசாமி!