தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில் , ”அதிமுக, பாஜக எதிர்ப்பு அலைதான் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. தேர்தல் பரப்புரையில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என நினைத்து மக்களை ஏமாற்றுவதற்கான திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
துணை முதலமைச்சர் முதல் முதலமைச்சர் வரை யாருமே வாக்காளர்களை சந்திக்கவில்லை. நான்கு ஆண்டுகளாக தொகுதி மக்கள் நலனை கவனிக்கவில்லை. இப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என கூறுகின்றனர்.
இதை மக்கள் ஏற்க தயாராக இல்லை. அமைச்சர்கள் அனைவரும் படுதோல்வி அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதேபோல் பாஜக போட்டியிடும் இருபது தொகுதிகளிலும் டெபாசிட் கூட கிடைக்காது. பாஜக மீது தமிழ்நாடு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
தற்போது தேர்தலுக்காக பெட்ரோல் விலையில் ஏற்றம் இல்லை. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு விலையை மூன்று மடங்காக உயர்த்துவார்கள். இதெல்லாம் மத்திய அரசின் மெக்கானிசம் செயல். தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது ஆளும் கட்சியினர்தான். பணத்தை வைத்துக்கொண்டு மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என நினைக்கின்றனர். பணம் கொடுப்பதெல்லாம் எடுபடாது, மக்கள் இதனை நிராகரிப்பார்கள்” என்றார்.
இதையும் படிங்க: இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு உண்மை தானடா!