ETV Bharat / state

"டிடிஎஃப் வாசனுக்கு வழங்கும் தீர்ப்பை கண்டு இளைஞர்கள் திருந்த வேண்டும்" - வழக்கறிஞர் அதிசய குமார் அறிவுரை - டிடிஎஃப் வாசன் மீது வழக்கு

Ttf Vasan Case: பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் வாகனத்தை எரிப்பதற்கு பதிலாக அரசின் கண்காட்சியில் வைத்து இளைஞர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என மக்கள் மேம்பாட்டுக் கழக நிறுவன தலைவரும், வழக்கறிஞருமான அதிசய குமார் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 9:44 PM IST

மக்கள் மேம்பாட்டுக் கழக நிறுவன தலைவர் அதிசய குமார்

தூத்துக்குடி: சென்னை - வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளான யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் செப்.19ஆம் தேதி வழக்கு தொடர்ந்தனர்.

பின்னர், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, ஜாமீன் கோரி டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், ஜாமீன் கேட்டு டிடிஎஃப் வாசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சாலையில் மிதமான வேகத்தில் வந்த நிலையில், கால்நடைகள் சாலையை கடந்ததால் திடீரென பிரேக் போட்டதால், வாகனத்தின் சக்கரம் தூக்கியதாகவும், பிரேக் போடாமல் இருந்தால் கால்நடைகள் மற்றும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், விபத்தில் காயமடைந்துள்ளதால், சிறையில் உரிய சிகிச்சைப் பெற முடியவில்லை எனவும் புண்கள் மோசமாகி வருவதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வேண்டியுள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தான் ஒரு அப்பாவி என்றும் எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

அந்த மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், யூடியூபில் 45 லட்சம் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கில் இரண்டு முதல் நான்கு லட்சம் ரூபாய் பாதுகாப்பு உடை அணிந்ததால் அவர் இந்த விபத்தில் உயிர் தப்பி இருக்கலாம். ஆனால், இதைப் பார்த்து மற்ற இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் 2 லட்சம் ரூபாய் விலையுள்ள பைக்கை வாங்கிக் கொடுக்குமாறு கேட்டு, இது போன்ற அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுவதாகவும், சிலர் கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, “விளம்பரத்துக்காகவும் மற்ற இளைஞர்களை தூண்டும் வகையிலும் செயல்பட்டுள்ள வாசனின் செயல், ஒரு பாடமாக அமைய வேண்டும். அவர் தொடர்ந்து நீதிமன்ற காவலிலேயே நீடிக்கட்டும்” எனக் கூறி வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், கையில் ஏற்பட்ட காயத்துக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அவரது யுடியூப் தளத்தை மூடிவிட்டு, பைக்கை எரித்து விடும்படி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து தூத்துக்குடியில், மக்கள் மேம்பாட்டு கழகத்தின் நிறுவன தலைவரும், வழக்கறிஞருமான அதிசய குமார் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், “யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது. இதில், யூடியூபர் டிடிஎஃப் வாசன் வாகனம் எரிக்கப்பட வேண்டும் என்று சுட்டி காட்டபட்டுள்ளது.

இது சமூகத்தின் மீதுள்ள அக்கறையில், இளைஞர்கள் மீதுள்ள அக்கறையில் அளவுக்கு அதிகமான கோபத்தில் இந்த தீர்ப்பை எழுதியுள்ளதாக தெரிகிறது. இந்த தீர்ப்பு வரவேற்க தகுந்த தீர்ப்பாகும். வாகனத்தை எரிப்பதற்கு பதிலாக அரசினுடைய மியூசியத்தில் வைத்து, அதற்கு கீழ் ‘நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் இந்த வாகனம் தடை செய்யப்பட்டது. இது போன்ற வாகனத்தை இளைஞர்கள் ஓட்டக்கூடாது’ என்ற செய்தியை விளம்பரமாக முன்னுதாமாக வைக்க வேண்டும்.

அது மட்டுமல்ல அவருடைய லைசென்ஸ் வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய வேண்டும். இளைஞர்கள் இதனைப் பார்த்து இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதிவேகமாக ஓட்டுவதற்கு சாலை வசதி நம் நாட்டில் இல்லை. நம் நாட்டில் அதுபோன்ற அதிவேகமாக ஓட்ட முடியாது. ஆகவே, அரசும் இதற்கான திட்டங்களை வகுத்து அரசாணைகளை பிறப்பிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ஆவேசம்.. ஆபாசம்.. அதிரடியாக வெளியான 'லியோ' டிரெய்லர்.. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.