ETV Bharat / state

தூத்துக்குடி வந்தடைந்தது 65.14 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்! - Oxygen Express Train

தூத்துக்குடி: தென் தமிழ்நாட்டிற்கான 65.14 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் கொண்ட இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடி வந்தடைந்தது.

தூத்துக்குடி வந்தடைந்தது 65.14 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்

author img

By

Published : Jun 8, 2021, 9:51 PM IST

தமிழ்நாட்டில் கரோனா நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்காக ஒடிசா மாநிலம் ரூர்கேலா இரும்பு தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட 65.14 மெட்ரிக் டன் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் மூலமாக டேங்கர் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் (ஜூன் 6) ஒடிசா மாநிலம் ரூர்கேலாவிலிருந்து கிளம்பி சேலம் கோட்டம் வழியாக நேற்று (ஜூன் 7) திண்டுக்கல்லை வந்தடைந்தது.

65.14 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன்

இதையடுத்து அங்கிருந்து இன்று மாலையில் கிளம்பிய ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் தூத்துக்குடி மீளவிட்டான் சரக்கு மாற்று ரயில்வே நிலையத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரிகள் விடுவிக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளுக்கு காவலர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

ரயிலில் வரவழைக்கப்பட்ட 65.14 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனில் 12.98 டன் ஆக்சிஜன் மதுரை தோப்பூருக்கும், தேனிக்கு 8.12 டன், ராமநாதபுரத்திற்கு 5 டன், சிவகங்கைக்கு 7.34 டன், சிகில்சோல் நிறுவனத்திற்கு 16.14 டன், ஸ்ரீராம் நிறுவனத்திற்கு 6.56 டன், மதுரை கல்யாண் நிறுவனத்திற்கு 9 டன் வீதம் என திரவ ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்து அனுப்பப்பட்டது.

தமிழ்நாட்டிற்கு இதுவரை ஏழு முறை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலமாக திரவ ஆக்சிஜன் மருத்துவ பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. தென்தமிழ்நாட்டிற்கு இரண்டாவது முறையாக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று வந்தடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.