தூத்துக்குடி: சர்வேதச உரிமைகள் கழகம் சார்பில் தமிழகம்-புதுச்சேரி அனைத்து நிர்வாகிகளுக்குமான கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சர்வதேச உரிமைகள் கழக நிறுவன தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், 'இந்த கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம். மத்திய அரசுக்கு சில கோரிக்கைகளையும், மாநில அரசுக்கு சில கோரிக்கைகளையும் நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம். மாநில அரசு தற்போது செயல்படுத்தி உள்ள மின் உயர்வு திட்டத்தை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும்.
கரோனா காலம் கழிந்து இப்போதுதான் மக்கள் சராசரி நிலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் மின் உயர்வை வாபஸ் பெற வேண்டும். அதேபோல் சொத்துவரி, வீட்டுவரி உயர்வு மற்ற வரி உயர்வை இன்னும் ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் எனவும், இதற்கு மத்திய அரசே காரணம் என்று மாநில அரசு சொல்லும் பொழுது மத்திய அரசு இசைவு கொடுத்து மாநில அரசு ஓராண்டு கழித்து இந்த சொத்து வரி உயர்வை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் மாநில அரசு விலை குறைத்து இருக்கிறார்கள். மத்திய அரசு இன்னும் விலை குறைப்பு செய்ய வேண்டும் ஏனென்றால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்டும். அதே போன்று இலங்கையில் தற்போது நடக்கக்கூடிய பிரச்சனைக்கு இந்திய அரசும், தமிழக அரசும் அனைத்து உதவியும் செய்தமைக்காக இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மிக அருமையான திட்டமாக சிற்பி திட்டம் அரசு பள்ளிகளில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை பேணும் விதத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. ஆகவே வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட அவர், போதை வஸ்துக்களை தடைசெய்ய காவல்துறை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். இன்றைக்கு உக்ரைனில் இருக்கக்கூடிய போர் பதக்கங்களை சரிப்படுத்த இந்திய அரசு தலையிட்டு செயல்படுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக கூறினார்.
இதையும் படிங்க:காலை உணவுத்திட்டம் முதலமைச்சரின் பேரன் அமர்ந்து உண்ணும் அளவிற்கு தரமானதாக இருக்குமா?: சீமான்