ETV Bharat / state

'கொடுத்த கடனை திருப்பி தராததால் இளைஞர் அடித்துக்கொலை' - The blockade of the District Collector's office

தூத்துக்குடி: ஏரல் அருகே கொடுத்த கடனை திருப்பி தராததால் இளைஞரை அடித்துக்கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடுத்தக்கடனை திருப்பி தராததால் இளைஞர் அடித்துக்கொலை
கொடுத்தக்கடனை திருப்பி தராததால் இளைஞர் அடித்துக்கொலை
author img

By

Published : Dec 21, 2019, 8:29 PM IST

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிறுதொண்டநல்லூர் மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது (வயது 43). இவர் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். சாகுல் ஹமீது கடனை திருப்பி கொடுக்காததால் கண்ணன் உள்பட ஆறு பேர் சேர்ந்து சாகுல்ஹமீதை கடந்த 14ஆம் தேதி காரில் கடத்திச் சென்று ஆழ்வார் திருநகரியில் கண்ணன் நடத்திவரும் மளிகைக் கடையின் பின்புறம் உள்ள இடத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தியுள்ளனர். பின்னர் அன்று மாலை சாகுல்ஹமீதை அவரது வீட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த சாகுல்ஹமீதை உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஏரல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (47) என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் கண்ணன், அவரது கூட்டாளிகளான முத்துப்பாண்டி, ஜான், ஆறுமுகநயினார் உள்பட ஐந்து பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து சாகுல் ஹமீது உறவினர்கள், இஸ்லாமிய அமைப்பினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது காவல் துறையினரிடம் சாகுல் ஹமீதை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுவரை சாகுல் ஹமீது உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே போராட்டக்காரர்களை காவல் துறையினர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்திக்க வைத்து புகார் மனு அளிக்கச் செய்தனர்.

கொடுத்தக்கடனை திருப்பி தராததால் இளைஞர் அடித்துக்கொலை

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உறவினர்கள், "சாகுல் ஹமீது உயிரிழப்புக்கு காரணமான ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்ய வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம்" என்றனர்.

இதையும் படிங்க: கடத்தல் மணல் எடுப்பதாகக் கூறி இளைஞர் மீது காவலர் தாக்குதல்!

Intro:ஏரல் அருகே கொடுத்தக்கடனை திருப்பி தராததால் வாலிபர் அடித்துக்கொலை - காரணமானவர்களை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்புBody:ஏரல் அருகே கொடுத்தக்கடனை திருப்பி தராததால் வாலிபர் அடித்துக்கொலை - காரணமானவர்களை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே சிறுதொண்டநல்லூர் மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது (வயது 43). இவர் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் ரூ.1லட்சம் கடன் வாங்கியிருந்தாக தெரிகிறது. இந்நிலையில், சாகுல் ஹமீது கடனை திருப்பி கொடுக்காததால் கண்ணன் உட்பட 6 பேர் சேர்ந்து சாகுல் ஹமீதை கடந்த 14ம் தேதி காரில் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை ஆழ்வார்திருநகரியில் கண்ணன் நடத்திவரும் மளிகைக் கடையின் பின்புறம் உள்ள இடத்தில் கட்டி வைத்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. அன்றுமாலை சாகுல் ஹமீதை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய சாகுல் ஹமீதை உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாகுல் ஹமீது உயிரிழந்தார். இது குறித்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பாக ஏரலைச் சேர்ந்த சோமசுந்தரம் (47) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கண்ணன், மற்றும் அவரது கூட்டாளிகளான முத்துபாண்டி, ஜான், ஆறுமுகநயினார் உட்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடனை திருப்பித் தராததால் வாலிபரை கடத்தி தாக்கியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவ அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து சாகுல் ஹமீது உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கந்து வட்டி கொடுத்து தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்கு அனுமதி அளித்தனர். தொடர்ந்து ஆட்சியரை சந்தித்து விட்டு வெளியே வந்த சாகுல்ஹமீதின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சாகுல் ஹமீது சாவுக்கு காரணமான 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்யவேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில் ஏரலில் கந்துவட்டி பிரச்சனையில் ஒருவர் இறந்திருப்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் கந்துவட்டி வசூல் செய்வது குறித்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் அல்லது தொடர்புடைய வருவாய் அதிகாரியிடம் புகார் அளிக்கலாம் இல்லையெனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.